சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம், தனது பயணத்தின்போது பூமியையும், நிலவையும் புகைப்படம் எடுத்து அனுப்பி இருக்கிறது. இதை இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.
நிலவை ஆய்வு செய்ய அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து, சூட்டோடு சூடாக சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையம் அனுப்பியது. தற்போது புவி சுற்றுவட்டப் பாதையில் 40,000 கி.மீ. தொலைவில் ஆதித்யா விண்கலம் சுற்றி வருகிறது.
வரும் 10-ம் தேதி சுற்றுவட்டப் பாதையின் தூரம் உயர்த்தப்படும். இதைத் தொடர்ந்து, சுற்றுவட்டப் பாதையின் உயரம் படிப்படியாக உயர்த்தப்பட்டு, அடுத்த 14 நாட்கள் பூமியின் சுற்றுவட்ட பாதையில்தான் ஆதித்யா விண்கலம் சுற்றும். இதன்பிறகே நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடையும்.
இந்த நிலையில், பூமியின் புகைப்படம் மட்டுமின்றி பூமியில் இருந்து 3,84,000 கி.மீ. தொலைவில் உள்ள நிலவையும் சேர்த்து புகைப்படம் எடுத்து ஆதித்யா விண்கலம் அனுப்பி இருக்கிறது. இந்த புகைப்படங்களை இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது. அந்த காணொளியில், பூமியையும் நிலவையும் காண முடிகிறது. பூமிக்கு முன்பு நிலவு ஒரு சிறிய புள்ளி போல தோற்றமளிக்கிறது. அதேபோல, ஆதித்யாவின் பாகங்களும் தெரிகிறது.
Aditya-L1 Mission:
👀Onlooker!Aditya-L1,
destined for the Sun-Earth L1 point,
takes a selfie and
images of the Earth and the Moon.#AdityaL1 pic.twitter.com/54KxrfYSwy— ISRO (@isro) September 7, 2023