சனாதன தர்மத்திற்கு எதிராக பேசிய திமுக அமைச்சர் உதயநிதியை கண்டித்தும், சனாதனத்தை ஆதரித்தும், I am proud Hindu Sanatani’ என்ற, டி- ஷர்ட் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த டி – சர்ட் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
சென்னையில் நடைபெற்றச் சனாதனத்திற்கு எதிரான மாநாட்டில் பங்கேற்ற திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வெறுப்பை வளர்க்கும் பேச்சை பேசினார்.
இதற்கு பாஜக, இந்து அமைப்புகள் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகள் என பலரும் நாடு முழுவதும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வட மாநிலங்களில், உதயநிதிக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அமைச்சர் உதயநிதியின் வெறுப்பு பேச்சை கண்டித்தும், சனாதன தர்மத்துக்கு ஆதரவு தெரிவித்தும், திருப்பூரைச் சேர்ந்த ஹிந்து இயக்க ஆதரவாளர்கள், ‘I am proud Hindu Sanatani’ என்ற ‘டி- ஷர்ட்’ தயார் செய்துள்ளனர்.
அந்த டி- ஷர்ட் அணிந்து பலரும் கம்பீரமாகக் காட்சி தருகின்றனர். மேலும், இந்த டி- ஷர்ட் அணிவது பெருமையாக இருக்கிறது என்று, அதனை போட்டோ எடுத்தும், வீடியோ எடுத்தும், சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
திருப்பூரில் தயார் செய்யப்பட்ட இந்த டி- ஷர்ட், பாரதத்தின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.