பெங்களூருவில் இருந்து மதுரை, பெங்களூருவில் இருந்து புதுச்சேரி இடையே வந்தே பாரத் இரயில்கள் இயக்கும் பணியை தென்மேற்கு ரயில்வே மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து இரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், “நாடு முழுதும் பல்வேறு வழித்தடங்களில், 30 வந்தே பாரத் இரயில்கள் இயக்கப்படுகின்றன. அடுத்த ஓரிரு மாதங்களில் மேலும் 3 வந்தே பாரத் இரயில்களின் சேவை துவங்கப்படும். அதில், தெற்கு இரயில்வேயில் ஒரு இரயிலும் இடம் பெறும்.
மேலும், தேவை அதிகமாக உள்ள வழித்தடங்களில், வந்தே பாரத் இரயில் இயக்க, அனைத்து இரயில்வே மண்டலங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில், தென்மேற்கு இரயில்வே பெங்களூருவில் இருந்து மதுரை மற்றும் புதுச்சேரிக்கு வந்தே பாரத் இரயில்கள் இயக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, வழித்தடங்கள், பயண நேரம் உள்ளிட்ட விபரங்கள் சேகரிப்பு பணியும், வந்தே பாரத் இரயில் பராமரிப்பு யார்டுகள் மேம்படுத்தும் பணியும் நடந்து வருகிறது. இந்த இரயில்களின் சேவை அடுத்த ஆண்டு இறுதிக்குள் துவங்கலாம்” என்று கூறினார்.