பாரதப் பிரதமர் மோடி பிறந்த நாள் – அண்ணாமலை தலைமையில் 73 ஜோடிகளுக்கு திருமணம்!
Aug 26, 2026, 01:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரதப் பிரதமர் மோடி பிறந்த நாள் – அண்ணாமலை தலைமையில் 73 ஜோடிகளுக்கு திருமணம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 8, 2023, 01:36 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாரதப் பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி, 73 ஜோடிகளுக்கு, தமிழ்முறைப்படி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில், சிவனடியார்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற உள்ளது.

வரும், 17 -ம் தேதி, பாரதப் பிரதமர் மோடியின், 73 -வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும், பாஜகவினர் கோலாகலமாக கொண்டாட உள்ளனர்.

அன்றைய தினம், தமிழகம் முழுவதும், ஏழை, எளியோருக்கு பாஜக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.

இதில், கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில், 73 ஜோடிகளுக்கு இலவச திருமண விழா மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

தமிழ் முறைப்படி, சிவனடியார்கள் முன்னிலையில், தமழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் திருமணம் நடைபெற உள்ளது.

இந்த திருமண விழாவில், மணமகளுக்குத் தாலி, கட்டில், பீரோ உள்ளிட்ட ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களும், கூடவே, நாட்டு பசுவும் வழங்கப்பட உள்ளது.

புதுமணத் தம்பதிகளுக்கு வழங்குவதற்காக, ஈரோடு மாவட்டம், காங்கேயத்தில், 72 நாட்டு பசுக்களை வாங்கி, கிணத்துக்கடவில் உள்ள கோசாலையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு ஜோடி தம்பதிக்கு, தலைவர் அண்ணாமலை தனது வீட்டில் ஆசையாக வளர்த்து வந்த நாட்டு பசுவை, திருமணப் பரிசாக வழங்க உள்ளார்.

இந்த விழாவில், கல்யாண விருந்து தயார் செய்தல், சீர்வரிசைப் பொருட்கள் வாங்குதல், தாலி செய்வது, பசுக்களை வாங்குவது, சுற்றுச்சூழலை பாதுகாப்பது என மொத்தம் 100 பேர் கொண்ட, 17 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

விழா ஏற்பாடுகளை, தமிழக பாஜக பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் மற்றும் மாவட்டத் தலைவர் வசந்தராஜன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

Tags: PM Modibjp annamalaimodi birthday
Share
Tweet
SendShare
Previous Post

அரசியலில் பொடிபையன் – உதயநிதிக்கு எல். முருகன் பதிலடி!

Next Post

பெங்களூரு – புதுச்சேரி: வந்தே பாரத் இரயில்!

Related News

கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை 25% உயர்வு; உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

தெருநாய்களை கருணைக் கொலை செய்யலாம்; கேரளா அரசு அனுமதி

மேகமலையில் அரசு ஊழியர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு

ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்; முதலமைச்சர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம்

முதல் தலைமுறை மாணவர்களுக்கு முழு கல்வி கட்டண விலக்கு; தமிழக அரசு அறிவிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

ஒரு கழுதையின் விலை ரூ.3 லட்சம் : சீனாவிற்கு ஏற்றுமதியாகும் பாகிஸ்தான் கழுதைகள் – சிறப்பு தொகுப்பு!

டெல்லியில் நாளை கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் – நீர் திறப்பு குறித்து ஆலோசனை!

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் – பேரவையில் இபிஎஸ் வலியுறுத்தல்!

பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து பேச அனுமதி மறுப்பு – திமுக வெளிநடப்பு!

பத்மஸ்ரீ விருது பெற்ற தாமோதரனின் சுயசரிதை நூல் – ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்!

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகை முதல் ஆண்டுக்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர் – முதல்வர் விஜய் அறிவிப்பு!

அக்டோபர் 2 முதல் மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படும் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் – ஈரான் எச்சரிக்கை!

எரிவாயு தட்டுப்பாடு : வங்கதேசத்தில் தொழிற்சாலைகள் மூடல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies