அரசியலில் பொடிபையன் – உதயநிதிக்கு எல். முருகன் பதிலடி!
Sep 12, 2026, 02:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசியலில் பொடிபையன் – உதயநிதிக்கு எல். முருகன் பதிலடி!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 8, 2023, 01:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உதயநிதி என்பவர் அரசியலில் பொடிபையன் என, பாஜக மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, மத்திய அமைச்சர் எல்.முருகன், தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளதாவது, திட்டங்கள் ஏதுமில்லா ஊதாரிகள்’ என்று, திமுக-வினரை அன்று பெரியார் சொன்னதை இன்று ஊர்ஜிதப்படுத்தி வருகிறார்கள் அவரின் வாரிசுகள்.

மத்திய அரசு எத்தனையோ மக்கள் நல திட்டங்கள் வழங்கியுள்ள போதும் அதை சரியாக எடுத்து செல்லாமல், தனது ஆட்சியின் மீதிருக்கும் அதிருப்தியை மடைமாற்ற எதை தின்றால் பித்தம் தெளியும் என்பதற்காக, இந்து மக்களின் நம்பிக்கைகளை அவமதிக்கும் வகையில் ‘சனாதனத்தை’ கையில் எடுத்திருக்கிறது தி.மு.க.

தாத்தா, மகன், பேரன் என்று இன்றளவும் அரசியலில், குடும்ப ஆதிக்கத்தை செலுத்தும் இவர்கள்தான் சனாதனத்தின் எதிரிகள். அண்ணா உருவாக்கிய கட்சியை,எத்தனையோ சிறந்த தலைவர்கள் இருந்தும் அவர்களுக்கு வழிவிடாமல் ஒரே குடும்பம் அபகரித்திருப்பதும் சனாதனத்துக்கு எதிரானது.

இன்னும் சொல்ல போனால் திராவிடம் என்கிற வார்த்தையை வழங்கியதே சனாதனம் தான். சனாதனம் என்றால் இந்துமதம், தர்மம் என்று பொருள்படுகிறது. சனாதன ஒழிப்பு மாநாடு என்றால் இந்துமத ஒழிப்பு மாநாடு என்று தான் பொருள்.

அப்படி இருக்க, கிறிஸ்துவமத ஒழிப்புமாநாடு அல்லது இஸ்லாம் மத ஒழிப்புமாநாடு என ஒரு மாநாட்டை உதயநிதியோ அல்லது போலி மார்க்சிஸ்ட் கட்சியால் கற்பனையில் கூட நடத்த இயலுமா? உதயநிதியின் பேச்சு இந்துமதத்தின் மீதான வன்மம் நிறைந்த தாக்குதல் என்பதற்கு சாட்சி நாடே கொத்தித்திருப்பதுதான்.

ஏதோ சினிமாவில் பேசும் வசனம் போல், தனது அரசியல் அறியாமையால் மத உணர்வுகளை தூண்டிவிட்டு மாற்று மதத்தினர் வாக்குகளை பெற,சமூகத்தின் அமைதியை கெடுத்து சாதி,மத வேற்றுமைகளை உண்டாக்கியுள்ள உதயநிதியின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அதனால் தான் தீவிர பாஜக எதிர்ப்பாளர்களான மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால் கூட அவரின் பேச்சை கண்டித்து ‘அரசியலில் பொடிபையன்’ என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

சமூகநீதியின் ‘கேன்சர்’, தி.மு.க..!

‘திட்டங்கள் ஏதுமில்லா ஊதாரிகள்’ என்று,  திமுக-வினரை அன்று பெரியார் சொன்னதை இன்று ஊர்ஜிதப்படுத்தி வருகிறார்கள் அவரின் வாரிசுகள்.
மத்திய அரசு எத்தனையோ மக்கள் நல திட்டங்கள் வழங்கியுள்ள போதும் அதை சரியாக எடுத்து செல்லாமல்,
(1/10)

— Dr.L.Murugan (@Murugan_MoS) September 7, 2023

 

கீழ்வெண்மணி ஆரம்பித்து நாங்குநேரி வரை நாறி கொண்டிருக்கிறது திராவிட மாடலின் சனாதன ஒழிப்பு. நூற்றாண்டை நெருங்கும் திமுக-வில் ஏன் இதுவரை ஒரு பெண் தலைவர், தலித் தலைவர் தலைமை வகிக்கவில்லை ஆணாதிக்கத்தின் ஆணிவேறாக ஊடுருவி இருக்கும் திமுக சனாதனம் குறித்து பேசுவது நகைச்சுவையாக இல்லையா?

மாவட்ட செயலாளர்கள் முதல் மாநில அமைச்சர்கள் வரை பொறுப்பு வகிக்க திமுக-வில் தலித்துகளுக்கு என்ன பஞ்சமா? இல்லையே. சாதிய ஆதிக்கத்தின் மொத்த உருவமாக நிமிர்ந்து நிற்கிறதே திமுக. இதில் சமூக நீதி குறித்து வகுப்பெடுக்கிறார்கள்.

வெறும் ஏட்டளவிலும், சொல்லளவிலும் சானதன ஒழிப்பு, சமூக நீதி என்று மூச்சுக்கு முன்னூறு முறை வாய்சவடால் விட்டு கொண்டிருக்கும் தி.மு.க., சமூகநீதியின் கேன்சராக இருந்து கொண்டு மக்கள் நலனை கெடுத்து, தன் அரசியல் ஆதாயத்தை தேடுகிறது.

தொடர்ந்து மதத்தை வைத்து அரசியல் நாடகமாடி ஒன்றாக இருக்கும் மக்களை பிளவுப்படுத்துகிறது, குளிர்காய்கிறது.

இனியும் உங்கள் போலி அரசியல் முகமூடியை நம்ப நாட்டு மக்கள் தயராக இல்லை. இதற்கெல்லாம் தக்க பதிலடி கொடுக்க ஆயத்தமாகவே இருக்கிறார்கள் என பதிவிடுட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் எல்.முருகனின் பதிவுக்கு பொதுமக்கள் பலரும் ஆதரவு தெரிவித்து, அவரது பதிவை தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் செய்து வருகின்றனர்.

Tags: lmurugan
Share
Tweet
SendShare
Previous Post

சென்னையில் கனமழை: விமானச் சேவைகள் பாதிப்பு!

Next Post

பாரதப் பிரதமர் மோடி பிறந்த நாள் – அண்ணாமலை தலைமையில் 73 ஜோடிகளுக்கு திருமணம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies