சுதந்திரப் போராட்ட தியாகி இமானுவேல் சேகரனின் 66 -ஆவது நினைவுதினம் மற்றும் குருபூஜையை யொட்டி, தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு, தியாகி, இமானுவேல் சேகரன் நினைவிடத்தில், மலரஞ்சலி செய்து மரியாதை செலுத்தினார்.
சுதந்திரப் போராட்டத்திலும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான சமூகப் போராட்டத்திலும் பெரும்பங்கு வகித்தவர் தியாகி இமானுவேல் சேகரன். ஒவ்வொரு வருடமும் அவரது நினைவைப் போற்றி வருகின்றனர்.
அந்த வகையில், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடி, அவர்களும் சமுதாயத்தில் அரசியல் அதிகாரம் பெற உழைத்த தியாகி இமானுவேல் சேகரனின் 66 -ஆவது நினைவுதினம் மற்றும் குருபூஜை நடைபெற்றது. இதில், தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு, தியாகி, இமானுவேல் சேகரன் நினைவிடத்தில், மலரஞ்சலி செய்து மரியாதை செலுத்தினார்.
அப்போது, அனைவரும் சமம் என்ற உயரிய லட்சியத்தை ஒவ்வொருவரும் மனதில் ஏந்தி, ஏற்றத் தாழ்வு இல்லாத சமூகத்தை உருவாக்க, அவரது நினைவு தினத்தில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அப்போது, கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர்கள் பொன் பாலாஜி, கருப்பு முருகானந்தம், பட்டியல் அணி மாநிலத் தலைவர் தடா பெரியசாமி, இதர பிற்பட்டோர் அணி மாநிலத் தலைவர் சுரேஷ் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத் தலைவர் தரணி மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.