ரஷ்யாவில் புடினை வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் சந்தித்தார். இரு நாட்டு தலைவர்களும் ஆயுத உச்சி மாநாட்டில் பங்கேற்றனர்.
வடகொரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 1,180 கிலோ மீட்டர் தொலைவு உள்ளது. ஆனால், வடகொரிய அதிபரோ, விமானத்தில் செல்லாமல், ரயில் மூலம் கிளம்பினார். ராணுவ பலத்தை அசுர வேகத்தில் உயர்த்தும் கிம் ஜாங் உன், ஏன் விமானத்தில் பயணிக்கவில்லை என்ற கேள்விக்கு, அவர்களது பாரம்பரியம் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இன்று ரஷ்யா சென்றடைந்தார். இவரது பயணம் அமெரிக்கா உட்பட பல சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் ரஷ்ய புடினை வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் சந்தித்தார். இரு நாட்டு தலைவர்களும் ஆயுத உச்சி மாநாட்டில் பங்கேற்றனர்.
உக்ரைனின் போரை எதிர்க்கொள்ள வட கொரியாவிடம் இருந்து ஆயுதங்களை கேட்டு புடின் நாடியதாக கூறப்படுகிறது. தற்போது அதனை உண்மையாக்கும் வகையில் இரு நாட்டு அதிபர்களின் சந்திப்பு நடைபெற்று உள்ளது. வட கொரியாவுடன் அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும் என்று அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிலுள்ள வாக்னர் படைக்கு ஆயுதங்களை வழங்கியதற்காக வடகொரியாவுக்கு அமெரிக்கா கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.