வியட்நாமில் பயங்கர தீவிபத்து: 50 பேர் உயிரிழப்பு!
Nov 15, 2025, 07:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வியட்நாமில் பயங்கர தீவிபத்து: 50 பேர் உயிரிழப்பு!

அடுக்குமாடிக் குடியிருப்பில் நள்ளிரவில் அரங்கேறிய சோகம்!

Web Desk by Web Desk
Sep 13, 2023, 08:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வியட்நாம் தலைநகர் ஹனோயில் 10 தளங்கள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 50 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், ஏராளமானோர் தீக்காயமடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

வியட்நாம் தலைநகர் ஹனோயில் 10 தளங்கள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று உள்ளது. இக்குடியிருப்பின் தரைத்தளத்திலுள்ள வாகன நிறுத்துமிடத்தில், உள்ளூர் நேரப்படி நேற்று நள்ளிரவு 2 மணியளவில் வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது. இது மளமளவென 10 தளங்களுக்கும் பரவியது. தகவலறிந்து வந்த மீட்புப் படையினர், கட்டடத்தில் தீயில் சிக்கித் தவித்த 70 பேரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இவர்களில் 50 பேர் சிகிச்சை பலனின்று உயிரிழந்து விட்டனர். எனினும், இக்கட்டடத்தில் 150-க்கும் மேற்பட்டோரு வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆகவே, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, தீவிபத்து ஏற்பட்ட கட்டடம், மிகவும் குறுகிய தெருவில் அமைந்துள்ளது. இதனால், தீயணைப்பு வாகனங்கள் 300 முதல் 400 மீட்டருக்கு அப்பால் வாகனங்களை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக தீயணைப்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாகவும், தீயை விரைந்து அணைக்க முடியவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மேற்கண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் தீவிபத்து போன்ற அவசர காலங்களில் தப்பிப்பதற்கு அக்கட்டடத்தில் எவ்வித வசதிகளும் இல்லை என்றும் கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வியட்நாமில் சமீபத்திய ஆண்டுகளில் இதுபோன்ற பல கொடிய தீவிபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. 2016-ம் ஆண்டு ஹனோய் கரோக்கி மைதானத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர்  உயிரிழந்தனர்.  2018-ம் ஆண்டு ஹோ சின் மின் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீப்பிடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். ஓராண்டுக்கு முன்பு, ஹோ சி மின் நகரின் வர்த்தக மையத்தில் உள்ள 3 அடுக்கு கரோக்கி பாரில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: Fire accidentvietnamcapitalhanoiapartment50 died
ShareTweetSendShare
Previous Post

கோஃல்ப் விளையாடி அசத்திய அண்ணாமலை!

Next Post

வீரமரணமடைந்த ராணுவ நாய் கென்ட் !

Related News

பீகார் தேர்தல் வெற்றி – தமிழகம் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்!

வளர்ந்த மாநிலங்களில் பீகாரும் விரைவில் இடம்பெறும் – நிதிஷ்குமார்

பீகாரை போல் தமிழகத்திலும் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும் – பிரதமர் மோடி உறுதி!

பீகாரில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்த முஸாபர்பூர் தொகுதியில் காங்கிரஸ் படுதோல்வி!

பீகார் தேர்தல் – நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் வெற்றி!

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies