கொடைக்கானலில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கோஃல்ப் விளையாடி மகிழ்ந்தார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, என் மண், என் மக்கள் 2-ம் கட்ட யாத்திரை கொடைக்கானல் சென்றடைந்த நிலையில், அங்கு கோஃல்ப் விளையாட்டை மகிழ்ச்சியுடன் விளையாடி அசத்தினார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கடந்த செப்டம்பர் 4-ம் தேதி தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் என் மக்கள், என் மண் 2-ம் கட்ட யாத்திரையைத் தொடங்கினார். தொடர்ந்து அவர் திட்டமிட்டபடி ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி வாரியாகப் பொதுமக்களைச் சந்தித்து, 3 -வது முறையாகப் பாரத பிரதமராக மோடி வெற்றிபெற வேண்டும் என ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் யாத்திரை மேற்கொண்டார் அண்ணாமலை. யாத்திரையின் இடையே, சிறிது இடைவெளியாக, அப்போது, அங்குள்ள ஒரு விளையாட்டு மைதானத்திற்குச் சென்றார். திடீரென பேண்ட், டி- சர்ட் சகிதம் காட்சி தந்தார். சிறிது நேரத்தில், கோஃல்ப் மட்டை கையில் எடுத்தவர், அவர்களுடன் உற்சாகத்துடன் கோஃல்ப் விளையாடி மகிழ்ந்தார்.
முதலில் ஐ.பி.எஸ். அதிகாரியாகவும், அடுத்து அரசியல்வாதியாகவும் அவதாரம் எடுத்த அண்ணாமலை தற்போது, விளையாட்டு வீரராகக் களத்தில் இறங்கி அடித்து ஆடி பலரது மனதையும் கவர்ந்துள்ளார்