தமிழகத்தின் டெங்கு கொசு உதயநிதி ஸ்டாலின்!- அண்ணாமலை!
May 19, 2025, 11:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தின் டெங்கு கொசு உதயநிதி ஸ்டாலின்!- அண்ணாமலை!

திமுகவுக்கு தெரிந்தது சாராயம் விற்போம், சனாதனத்தை ஒழிப்போம், தேர்தலுக்கு முன்பு பல்டி அடிப்போம்.

Web Desk by Web Desk
Sep 14, 2023, 10:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக அமைச்சர்கள் உதயநிதி, அன்பில் மகேஷ் ஆகியோருக்கு சினிமா விழாவில் பங்கேற்பது, மற்றொன்று சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று பிதற்றுவது என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

இன்றைய ”என் மண் என் மக்கள்” பயணம், வைகை ஆறு, மருதாநதி, மஞ்சளாறு என மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடமான நிலக்கோட்டையில்,  பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீது பேரன்பு கொண்ட மக்கள் திரள் சூழ இனிதே நடந்தது.

காய், கனி மற்றும் மலர் என மூன்றுமே சாகுபடி ஆகும் நிலக்கோட்டை மண் தான், ஒருங்கிணைந்த மதுரை மாவட்டமாக இருந்தபோது, மதுரை மல்லி எனப் பெயர் வரக் காரணமே.

அந்த ஆண்டு மார்ச் மாசம் தேர்தல் வந்ததால் இந்துக்கள் மீது திடீர் பாசம். கருணாநிதி அவர்களுக்கு. 24.10.2002 அன்று, கிறிஸ்துவர்கள் இஸ்லாமியர்கள் மத்தியில் கருணாநிதி, ஹிந்து என்றால் திருடன் என்று பேசினார். இவர் தான் 1971ஆம் ஆண்டில் ஹிந்து மதத்தவரை புண்படுத்த கூடாது என்று பேசினார்.… pic.twitter.com/JKvkaYbhW6

— K.Annamalai (@annamalai_k) September 13, 2023

இங்கு, விவசாயத்தில் 60 சதவீதத்திற்கு மேல் மலர் சாகுபடி நடைபெறுகிறது. சுமார் 10,000 ஏக்கர் நிலப்பரப்பில் மல்லி இங்கு சாகுபடி செய்யப்படுகிறது. 1 லட்சம் மக்கள் இந்த மலர் விவசாயத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். இம்மண்ணைப் பெருமைப் படுத்தும் விதமாக, இந்த வருடம் ஜனவரி மாதம் மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு வழங்கியது நமது மத்திய அரசு.

அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து தேச விடுதலைக்காக போராடிய, மகாகவி பாரதியின் உற்ற நண்பனாக விளங்கிய சுப்ரமணிய சிவா பிறந்த மண் இது இங்கிருக்கும் வத்தலக்குண்டு.

திண்டுக்கல் மாவட்டம் மீது நமது மாண்புமிகு பாரத பிரதமர் மோடி கொண்ட தனி அன்பின் காரணமாக, தமிழகத்திற்கு வழங்கப்பட்ட 11 அரசு மருத்துவ கல்லூரிகளில் ஒன்று திண்டுக்கலுக்கு வழங்கப்பட்டது.

சென்ற ஆண்டு நவம்பர் மாதம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் நமது பிரதமர் மோடி பங்கேற்றார். சுதேசி இயக்கத்தின் முன்னோடியாகத் தமிழகம் திகழ்ந்ததை தனது உரையில் குறிப்பிட்டார்.

தமிழகத்தின் டெங்கு கொசு உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு இருவரும் அமைச்சராக இருக்க தகுதியற்றவர்கள். தமிழக அரசின் பாடத்திட்டத்தில் இருப்பது கூட இவர்களுக்கு தெரியாது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுக்கே தெரியாது. இவர்களுக்கு தெரிந்தது இரண்டே விஷயம்தான். சினிமா விழாவில் பங்கேற்பது. மற்றொன்று சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று பிதற்றுவது. இவர்கள் இருக்க வேண்டிய இடம் சட்டமன்றம் இல்லை. பன்னிரண்டாம் வகுப்பு.

தமிழக அரசு பதிப்பித்துள்ள மேல்நிலை இரண்டாம் ஆண்டுக்கான புத்தகத்தில், ‘இந்து சமயம்; சனாதன தர்மம், வேத சமயம், வைதீக சமயம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.

சனாதன தர்மம் என்றால் அழிவில்லாத நிலையான அறம். புத்தகத்தை அச்சடித்த திமுக அரசு, அதை ஒரு முறை படித்திருந்தால் இப்படி இந்து தர்மத்திற்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் செய்யவேண்டியது இருக்காது.

1971ஆம் ஆண்டு சேலத்தில் திராவிடர் கழகம் 1971ஆம் ஆண்டு இந்து மத கடவுள்களை கொச்சை படுத்தி ஊர்வலம் நடத்தினார்கள். இதற்கு கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்தார். 1971 பிப்ரவரி 1 அன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “மதவாதிகள் மனம் புண்படும்படியாக, ராமர் சிலை போன்றவை ஆபாசப்படுத்தப்பட்டதாக வந்த செய்தி அறிந்து வருத்தப்பட்டேன். மதவாதிகள் மனம் புண்படும்படியாக எது நடந்தாலும், அதை எனது அரசு விரும்பாது.” என்றார்.

அந்த ஆண்டு மார்ச் மாசம் தேர்தல் வந்ததால் இந்துக்கள் மீது திடீர் பாசம். கருணாநிதி அவர்களுக்கு. 24.10.2002 அன்று, கிறிஸ்துவர்கள் இஸ்லாமியர்கள் மத்தியில் கருணாநிதி, ஹிந்து என்றால் திருடன் என்று பேசினார்.

இவர் தான் 1971ஆம் ஆண்டில் ஹிந்து மதத்தவரை புண்படுத்த கூடாது என்று பேசினார். 2002ஆம் ஆண்டு இவர் ஆட்சியில் இல்லை. உடனே சந்திப்பதற்கு தேர்தலும் இல்லை. அதனால் திமுக தனது உண்மை முகத்தை காட்டியது.

நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் 2006ஆம் ஆண்டு கருணாநிதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2013 ஆம் ஆண்டு, நீதிமன்றத்தில் கருணாநிதி என்ன சொன்னார் தெரியுமா? நான் இந்து என்றால் திருடன் என்று சொல்லவில்லை.

இந்து என் உள்ளம் கவர்ந்த திருடன் என்று தான் சொன்னேன் என்று பல்டி அடித்தார் கருணாநிதி. ஊழல் புகார்கள் தலையை கழுகு போல வட்டமடித்துக் கொண்டிருக்கும்போது, இந்து மக்கள் வாக்கும் இல்லை என்றால் 2014ஆம் ஆண்டு ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாது என்று கருணாநிதிக்கு தெரியும். அதனால் தான் சொல்கிறோம்.

திமுக முதல் ஆண்டு சனாதனத்தை விரட்டுவோம் என்பார்கள். இரண்டாம் ஆண்டு சனாதனத்தை எதிர்ப்போம் என்பார்கள். மூன்றாம் ஆண்டு சனாதனத்தை ஒழிப்போம் என்பார்கள். நான்காம் ஆண்டு சனாதனத்தை வேர் அறுப்போம் என்பார்கள். தேர்தலுக்கு முன்பு வெற்றிவேல் வீரவேல் என்பார்கள்.

நிலக்கோட்டையில் தனியார் பள்ளி ஒன்றில், மதிய உணவு இடைவேளையின்போது வகுப்பறையில் யாரும் இல்லாதபோது மாணவிகள் மது அருந்தி பிறந்தநாளை கொண்டாடிய சம்பவம் சமீபத்தில் அரங்கேறியுள்ளது. இதனால் 7 மாணவிகள் இடைநீக்கம் செய்யப்பட்டார்கள்.

அந்த மாணவிகளுக்கு மது விற்ற டாஸ்மாக் கடை மீது என்ன நடவடிக்கை எடுத்தார் அமைச்சர் முத்துசாமி. குழந்தைகளுக்கு மது விற்றுத் தான் நீங்கள் அரசு நடத்தவேண்டுமா? பள்ளி மாணவர்கள் வரை போதை பழக்கம் சென்றபிறகும் டாஸ்மாக் கடைகளை மூடாமல் sachet போட்டு விற்கலாமா என்று ஆலோசிக்கிறீர்களே, உங்களுக்கு வெட்கமாக இல்லையா? திமுகவுக்கு எப்போதுமே இது தான் சிந்தனை.

1990ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி அன்றைய திமுக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதாவது ஏழை எளிய மக்கள் பயன்பெற இனிமேல் மலிவு விலை மதுபானங்களை அரசே விற்பனை செய்யும். இதற்கு அன்றைய காலத்தில் கருணாநிதி தொடங்கி வைத்த நடைமுறை தான் பாக்கெட் மதுபானம். இன்று முத்துசாமி அவர்களின் முன்னெடுப்பில் பாக்கெட் மதுபானம் பரிணாம வளர்ச்சி கண்டு இப்போது sachet சாராயமாக மாறியுள்ளது. திமுகவுக்கு தெரிந்தது சாராயம் விற்போம், சனாதனத்தை ஒழிப்போம், தேர்தலுக்கு முன்பு பல்டி அடிப்போம்.

நிலக்கோட்டை, பண்ணைக்காடு ஆகிய ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் நவீனப்படுத்தப்பட்டு தரம் உயர்த்தப்படும், நிலக்கோட்டையில் நறுமணத் தொழிற்சாலை மற்றும் முருங்கை மாவு தொழிற்சாலை அமைக்கப்படும், நிலக்கோட்டையில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படும், இப்படி எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம், ஒரு துண்டு சீட்டில், 99% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று எழுதிக் கொடுத்து விட்டார்கள்.

அவரும் அதை அப்படியே வாசித்து விட்டுச் சென்றிருக்கிறார். மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. நிறைவேற்றிய வாக்குறுதிகளுக்கான வெள்ளை அறிக்கை வெளியிட தைரியம் இருக்கா திமுகவுக்கு?

வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்த மக்கள் விரோத ஊழல் திமுகவுக்கு பாடம் புகட்டுவோம். பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சி தொடர வாக்களிப்போம், எனத் தெரிவித்தார்.

Tags: enmanenmakkalk Annamalai Bjp
ShareTweetSendShare
Previous Post

புதிய ஆப்பிள் வாட்ச் !

Next Post

இந்தி மொழி தினம் – பிரதமர் மோடி, அமித்ஷா வாழ்த்து!

Related News

முல்லைப்பெரியாறு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூடுதல் பதில் மனுத் தாக்கல்!

பல்வேறு பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி சுட்டுக்கொலை!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : மூவர்ண கொடியை ஏந்தி அமித்ஷா பேரணி!

ஆபரேஷன் சிந்தூர் குறித்த புதிய வீடியோவை வெளியிட்ட இந்திய ராணுவம்!

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்!

ராணுவத்தின் அங்கம் ஜிகாத் : ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் – அதிர்ச்சியில் உலக நாடுகள்!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானுக்கு துணைநிற்கும் துருக்கி : துருக்கியை புறக்கணிக்கும் இந்திய மக்கள்!

மக்கள் கொண்டாடும் ரியல் ஹீரோ ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி!

ஆப்ரேஷன் சிந்தூர் : பாகிஸ்தானில் கதிர்வீச்சு கசிவு இல்லை : IAEA மறுப்பு!

தேச நலனுக்கான நடவடிக்கை : துருக்கி நிறுவனத்தை கை கழுவிய இந்தியா!

ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு!

தெய்வசெயலின் குற்றச்செயல் – கதறும் பெண் : திமுக நிர்வாகிகளுக்கு இரையாக்க முயற்சி?

விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் தொழில்நுட்ப கோளாறு!

ஹைதராபாத் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து : பலியானோர் எண்ணிக்கை 17-ஆக உயர்வு!

வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு கட்டுப்பாடு!

இனி கரண்ட் பில் “NO” : PM சூர்யோதய திட்டம் சலுகையோ சலுகை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies