இராணுவ அதிகாரிகள் மற்றும் காவல்துறை டி.எஸ்.பி. உயிரிழப்புக்குக் காரணமான பாகிஸ்தானை கண்டித்து ஜம்மு காஷ்மீரில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்தியா விளையாடக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், இராணுவ வீரர்களும், மாநில காவல்துறையினரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, ரஜோரி மாவட்டத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள், இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில், இராணுவ ஜவான் ஒருவர் வீரமரணமடைந்தார். மேலும், இருவர் காயமடைந்தனர். தவிர, மோப்பநாய் ஒன்றும் துப்பாக்கிச் சூட்டில் பலியானது. இத்தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தில்
அதேபோல, அனந்த்நாக் மாவட்டத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள், கூட்டுப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில், ஒரு இராணுவ கர்னல், மேஜர் மற்றும் காவல்துறை டி.எஸ்.பி. ஆகிய 3 பேர் பலியாகினர். மேலும் சிலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் இராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த குழு பொறுப்பேற்றிருக்கிறது.
இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக அனந்த்நாக் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி வீரமரணமடைந்த இராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறை டி.எஸ்.பி.க்கு அஞ்சலி செலுத்தினர். மேலும், உலகக் கோப்பை கிரிக்கெட் மற்றும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடக் கூடாது என்றும் கோஷம் எழுப்பப்பட்டது.