இந்தியாவுக்கு வர டெஸ்லா ஆர்வமாக உள்ளது என்றும், 1.9 பில்லியின் டாலர் மதிப்பிலான வாகன உதிரி பாகங்களை நாட்டிலிருந்து பெறத் திட்டமிட்டுள்ளது என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறன. ஆனால், அவை எல்லாவற்றையும் ஓரம் கட்டிவிட்டு, கடந்த 10 ஆண்டுகளில் மிகப் பெரிய நிறுவனமாக உயர்ந்துள்ளது எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம்.
இந்த நிறுவனம், வாடிக்கையாளர்கள் மனதைப் புரிந்து கொண்டும், சந்தை நிலவரத்தைப் புரிந்து கொண்டும், புதிய வாகனங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், அதன் வர்த்தகத்தை உலகம் முழுக்க விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், இந்திய ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (ஏசிஎம்ஏ) 63 -வது ஆண்டு கூட்டத்தில், , மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் பேசுகையில், டெஸ்லா ஏற்கனவே ஒரு பில்லியின் டாலர் மதிப்புள்ள ஆட்டோமொபைல் உதிரிப் பாகங்களை இந்தியாவிலிருந்து பெற்றுள்ளது.
முதன் முதலில் கடந்த 2021 -ம் ஆண்டில் தனது எலக்ட்ரிக் வாகனங்களுக்கான 100 சதவீதம் இறக்குமதி வரியை ரத்து செய்ய அரசிடம் கோரிக்கை வைத்தது.
இதற்காக, கடந்த ஆண்டு, டெஸ்லாவிற்கும் இந்திய அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், டெஸ்லா நிறுவனம் முதலில் உள்ளூர் உற்பத்தியில் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
கடந்த பல மாதங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிவில், டெஸ்லா நிறுவனம், சுமார் 24,000 டாலர் விலையில் புதிய எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க ஒப்புக் கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
24,000 டாலர் கோடியில், அதாவது, இந்திய மதிப்பில் 15,800 கோடியில் குறைந்த விலை மின்சார வாகனத்தை (EV) தயாரிக்கும் தொழிற்சாலையை இந்தியாவில் உருவாக்க டெஸ்லா திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் பல ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.