மோடியே மீண்டும் பிரதமர்: நிதின் கட்கரி உறுதி!
Sep 5, 2026, 07:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மோடியே மீண்டும் பிரதமர்: நிதின் கட்கரி உறுதி!

2024 தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெறுவோம் என நம்பிக்கை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 14, 2023, 05:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றிபெறும். நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராவார் என்று மத்திய சாலை போக்குவரத்து த்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருக்கிறார்.

2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகள் 28 கட்சிகள் கொண்ட கூட்டணியை அமைத்திருக்கின்றன. அதேபோல, ஆளும் பா.ஜ.க. 40 கட்சிகள் கொண்ட மெகா கூட்டணியை அமைந்திருக்கிறது. இரு அணிகளும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டன. பா.ஜ.க. மக்கள் ஆசீர்வாத யாத்திரை உள்ளிட்ட பல்வேறு யாத்திரைகளை நடத்தி, பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்து வருகிறது. மேலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்று பா.ஜ.க.வினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, “வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் பா.ஜ.க. வெற்றிபெறும். நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராவார். தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுப்பெற்றதால்தான் “இண்டியா” கூட்டணி உருவானது. தனித்துப் போட்டியிட முடியாது, தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதைப் புரிந்துகொண்டு, பலவீனமான எதிர்கட்சியினர் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டணியை உருவாக்கி இருக்கிறார்கள்.

60 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி செய்யாததை 10 ஆண்டுகளில் நாங்கள் செய்து முடித்திருக்கிறோம். 2070-ம் ஆண்டுக்கு முன்பு கார்பன் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றப் போகிறோம். ஆட்டோ மொபைல் துறை வளர்ச்சி அடைந்திருக்கிறது. நாங்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். பிரச்னைகளை வாய்ப்புகளாக மாற்றும் சிலர் உள்ளனர்” என்று கூறியிருக்கிறார்.

Tags: PM Modiprime ministerNitin GadkariAgain
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

Next Post

காஷ்மீர்: தீவிரவாதிகளுடன் மோதல் – 2 ராணுவ அதிகாரிகள், டிஎஸ்பி வீரமரணம்!

Related News

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies