கேரளாவில் புகழ் பெற்ற திருக்கோவில்களில் சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலும் ஒன்று. இந்த திருக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்குப் பூஜையையொட்டி, நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் கோவில் நடை திறப்பது வழக்கம்.
இதுதவிர, ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாவின் போதும் நடை திறக்கப்படும்.
இந்நிலையில், புரட்டாசி மாத பூஜையொட்டி, கோவில் நடை வரும் புரட்டாசி 17-ம் தேதி மாலை 5 மணிக்குத் திறக்கப்படுகிறது.
அன்றைய தினம், தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையைத் திறந்து வைக்கிறார்.
18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை பக்தர்கள் சுவாமியை கண் குளிர தரிசனம் செய்யலாம்.
அப்போது, வழக்கான பூஜைகளுடன், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், களசாபிஷேகம், சகஸ்ர காசாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜையும் சுவாமிக்கு நடைபெறும்.
22-ம் தேதி இரவு 10 மணியளவில் திருக்கோவில் நடை அடைக்கப்படும்.