நாம் இப்போது எந்தவித சிக்கல்களும் இல்லாமல், அரசு மானியங்களை பெற நேரடியாக வங்கி கணக்குகளில் பெறுவதற்கு பிரதமர் மோடியே காரணம் என்று தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தமிழகத்தில் உரிமைத்தொகை பெறும் சகோதரிகள் மகிழ்ச்சி அடைய ஒரு சகோதரனாக தொலைநோக்குப் பார்வையுடன் அன்றே ஜன்தன் வங்கி கணக்கை தொடங்கிய பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த உரிமைத் தொகையை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்துவதற்கு முதல் காரணமாக இருந்தவர் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தான்..
https://x.com/DrTamilisaiGuv/status/1702551323684802811?s=20
Thank you Hon'ble @PMOIndia Shri.@narendramodi your visionary initiatives to facilitate Bank account to everyone facilitate easy delivery of welfare schemes of state or centre to beneficiaries without pilferage by middle men as in the past. Today TN women get their monthly… pic.twitter.com/BvIsyTtwRH
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) September 15, 2023
மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்கள் தான் முதன் முதலில் அனைத்து பெண்களுக்கும் வங்கி கணக்கு தொடங்க வேண்டுமென்று ஜன் தன் வங்கி கணக்கை தொடங்கி வைத்து அவர்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறார்கள்.
ஜன்தன் வங்கிக் கணக்குகளின் மூலம் ஏழை,எளிய மக்களின் வங்கி கணக்குகளில் மத்திய,மாநில அரசின் மானியங்கள் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படுகிறது. மாண்புமிகு பாரதப் பிரதமருக்கு நம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வோம்.
பாரத தேசம் முழுவதும் சுமார் 50 கோடி ஜன் தன் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் 56% பெண்கள் ஜன் தன் வங்கி கணக்குகளை தொடங்கி உள்ளனர்.
கொரானா தொற்று காலத்தில் ஜன் தன் வங்கி கணக்கு வைத்திருந்த அனைத்து பெண்களுக்கும் மூன்று மாதம் மத்திய அரசு 500 ரூபாய் உதவித்தொகை அளித்தது.
முண்டியடித்துக்கொண்டு வரிசையில் நின்று அரசு மானியங்களை பெற்ற நாம் இப்போது எந்தவித சிக்கல்களும் இல்லாமல் நேரடியாக வங்கி கணக்குகளில் பெறுவது இதுவே டிஜிட்டல் இந்தியா என தெரிவித்துள்ளார்.