பிரபல நிறுவனத்தில் 2-வது நாளாக ஐடி ரெய்டு – கோவையில் பரபரப்பு
Jul 29, 2026, 02:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரபல நிறுவனத்தில் 2-வது நாளாக ஐடி ரெய்டு – கோவையில் பரபரப்பு

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 15, 2023, 05:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் உள்ள பிரபல கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள், 2- வது நாளாகச் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை மருதமலை சாலையில் நவாவூர் பிரிவு பகுதியில் ஸ்ரீதக்‌ஷா பிராப்பர்டீ அண்ட் டெவலப்பர்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

ஸ்ரீதக்‌ஷா பிராப்பர்டீ அண்ட் டெவலப்பர்ஸ் தலைமை அலுவலகம் மற்றும் வடவள்ளி குருசாமி நகர், அருள்நகர், பாலாஜி நகரில் உள்ள நிறுவனத்தின் இயக்குநர்கள் மோகன், ராமநாரயணன், மற்றும் அருள் ஆன்டனி ஆகியோரது வீடுகளிலும், அவர்களுக்குச் சொந்தமான 50 இடங்களிலும் நேற்று காலை முதல் வருமானவரித்துறையினர் திடீர் சோதனையில் மேற்கொண்டனர்.

காலை 11 மணி அளவில் 5-க்கும் மேற்பட்ட வாகனங்களில் 25-க்கும் மேற்பட்ட வருமானவரித் துறை அதிகாரிகள் வருகை தந்தனர். அவர்கள் அனைவரும், கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்குள் சென்று அதிரடியாகச் சோதனை செய்தனர்.

அப்போது, அந்த அலுவலகத்தில் இருந்த ஊழியர்களை அதிகாரிகள் வெளியே விடவில்லை. வெளியே இருந்து யாரையும் உள்ளேயும் அனுமதிக்கவில்லை.

தமிழகம் முழுவதும் எத்தனை இடங்களில் குடியிருப்புகள் கட்டப்படுகிறது? ஒரு வீட்டின் விலை என்ன? அதற்கு ஆகும் செலவு என்ன? இதற்கு பணம் எப்படி வந்தது? அதற்கான ஆதாரம் என்ன? இதன் மூலம் கிடைத்த லாபம் எவ்வளவு? என்பது உள்பட பல்வேறு கேள்விகளைக் கேட்டு துளைத்தெடுத்தாக கூறப்படுகிறது. இந்த சோதனை நேற்று நள்ளிரவு 1 மணி வரை மொத்தம் 14 மணி நேரம் நடந்தது.

பின்னர், வீட்டிலிருந்து யாரும் வெளியே செல்ல முடியாத படியும், வெளியே இருந்து யாரும் உள்ளே வர முடியாத படியும் காவல்துறை மூலம் தடுப்பு ஏற்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, 2-வது நாளாகக் காலை 9.30 மணி முதல் கட்டுமான நிறுவனம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதில், இந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான மோகன், திமுக அமைச்சர்  ஒருவருக்கு மிகவும் நெருக்கமான நண்பர் என்று கூறப்படுகிறது.

Tags: IT raidcoimbatore
ShareTweetSendShare
Previous Post

ரூ.1,000 அரசு மானியம் பெறுவதற்குப் பிரதமர் மோடியே காரணம் ! – ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அதிரடி

Next Post

திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

Related News

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies