வாக்களித்து வெற்றிபெறச் செய்த மக்களை வஞ்சித்துவிட்டார் அமைச்சர் சக்கரபாணி. இதற்கு மேலும் மக்கள் அவரை நம்பி வாக்களிக்க மாட்டார்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் 2-ம் கட்ட யாத்திரையை கடந்த 4-ம் தேதி தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தொடங்கினார். இந்த நிலையில், 15-ம் தேதி, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகரில் யாத்திரை நடைபெற்றது.பாரதப் பிரதமர் மோடி மீது பேரன்பு கொண்ட பொதுமக்கள் கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திருமலை சின்னப்ப நாயக்கர் வழிவந்த 19 -ஆவது பாளையக்காரர், விருப்பாச்சி கோபால நாயக்கர் ஆங்கிலேயர்களை எதிர்க்க திண்டுக்கலிலிருந்து ஒரு கூட்டமைப்பைத் திரட்டி ராணி வேலுநாச்சியாருக்கும், ஊமைத்துரைக்கும் போரில் காலத்தில் உதவி செய்து, பாஞ்சாலங்குறிச்சி சிறைக்குள்ளே பூட்டி வைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரையை, சிறைக்குள்ளே புகுந்து அதிரடிப் போர் நடத்தி மீட்ட மாவீரர்.
பணத்திற்கு ஆசைப்பட்ட சில துரோகிகளால், கோபால் நாயக்கர் கைது செய்யப்பட்டு, தூக்கிலிடப் பட்டார். அவர் தூக்கிலிடப்பட்ட இடம் அவரது பெயரால் இன்று கோபால் சமுத்திரம் என்று அழைக்கப்படும் குளக்கரை. சாகும் போது கூட, கொஞ்சமும் கலங்காமல் தன் மரணத்தைப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்ட மாவீரனாக திகழ்ந்தார், கோபால் நாயக்கர். அத்தகைய மாவீரர்கள் வாழ்ந்த மண்.
ஆசியாவின் மிகப் பெரிய காய்கறி சந்தைகளில் ஒன்றாகவும், விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் அடிப்படையில், தமிழ்நாட்டிலேயே பெரிய காய்கறிச் சந்தையாகவும் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறிச் சந்தை விளங்குகிறது. கேரளா மாநிலத்தின் 60% காய்கறிகளின் தேவையை, ஒட்டன்சத்திரம் சந்தைதான் நிறைவேற்றுகிறது.
வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, முருங்கைக்காய், பீன்ஸ் என பல காய்கறிகள் இந்த சுற்றுவட்டாரத்தில் பயிரிடப்படுகின்றன. வாதம், மூட்டுவலிதொழுநோய், வயிற்று உபாதைகள் மற்றும் பாம்புகடி போன்றவற்றிலிருந்து விடுபடச் மிகச்சிறந்த மருந்தான கண்வலிக் கிழங்கு, இந்தப் பகுதியில் அதிகம் பயிரிடப்படுகிறது.
தயிர், வெண்ணை விற்க மட்டுமே 600 கடைகள் இருக்கின்றன. ஒட்டன்சத்திரம் சந்தையில், ஒரு நாளைக்கு 20 கோடி ரூபாய் வியாபாரமாகிறது. ஆனால், இந்தச் சந்தைக்குத் தேவைப்படும் குளிர்பதன வசதியை, இதுவரை நிறைவேற்றிக் கொடுக்கவில்லை இந்தத் தொகுதி அமைச்சர். ஒட்டன்சத்திரம் கால்நடைச் சந்தையில், ஞாயிறு தோறும் 2,000 பசுமாடுகள் விற்பனையாகும் அளவுக்குப் புகழ்பெற்றது.
மத்திய அரசு, பழநி – ஒட்டன்சத்திரம் நான்கு வழிச்சாலை திட்டத்துக்கு, ரூ.172 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறது. தமிழகத்திற்கு வழங்கப்பட்ட 11 மருத்துவ கல்லூரிகளில் ஒன்று திண்டுக்கல்லுக்கு வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையை மேம்படுத்த 1159 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது நமது மத்திய அரசு. 242 கோடி ரூபாய் செலவில் திண்டுக்கல் பழனி பாலக்காடு ரயில் மின்சாரமயக்குதல் பணிகள் நிறைவுபெற்று மக்கள் பயன்பாட்டிற்கு இந்த வருடம் ஏப்ரல் மாதம் நமது பாரத பிரதமர் மோடி துவக்கி வைத்தார். நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் 2050 -ம் ஆண்டுக்குள் ரயில்தடம் மின்சார மயமாக்குவோம் என்று சொல்கிறார்கள். இந்தியாவில் கடந்த 9 ஆண்டுகளில் 37,011 ரயில் கிலோமீட்டர் மின்சாரமயமாக்கி சாதனை படைத்துள்ளார் நமது பாரத பிரதமர். ஒட்டுமொத்த ரயில் தடங்களில் 90 சதவீதம் மின்சார மயமாக்கப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கூட்டத்தில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் பணி வழங்குவதாகக் கூறி, கையொப்பம் வாங்கிவிட்டு, வேலை வழங்காமல் ஏமாற்றியிருக்கிறது திமுக. நலத்திட்டங்கள் எதுவும் செய்யாமல் புறக்கணித்திருக்கிறது திமுக. மதுரை மாவட்டம் திருமங்கலம் கப்பலூரில் உள்ள நுகர்வோர் வாணிபக் கழகத்தில் மூட்டைகளில் சேகரித்து வைத்து இருந்த நெல்மணிகள் முளைத்து இருந்தது. விவசாயிகள் கஷ்டப்பட்டு விவசாயம் செய்து, அறுவடை செய்து கொண்டு வரும் நெல்லை இந்த அரசு பாதுகாப்பாக வைத்திருக்க மாட்டார்கள். திமுக ஆட்சிக்கு வந்ததும், கான்கிரீட் வீடு கட்ட நாலு லட்சம் தருவேன் என்று சொன்னார் அமைச்சர் சக்கரபாணி. சந்தைக்கு குளிர்சாதன கிடங்கு, வீடில்லாத அனைவருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வீடுகள், நீண்டநாள் கோரிக்கையான பாதாள சாக்கடை திட்டம், வேலைவாய்ப்புகளை மேம்படுத்த தொழிற்பேட்டை என ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கூட்டத்தில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் பணி வழங்குவதாகக் கூறி, கையொப்பம் வாங்கிவிட்டு, வேலை வழங்காமல் ஏமாற்றியிருக்கிறது திமுக. நலத்திட்டங்கள் எதுவும் செய்யாமல் புறக்கணித்திருக்கிறது திமுக.
மதுரை மாவட்டம் திருமங்கலம் கப்பலூரில் உள்ள நுகர்வோர் வாணிபக் கழகத்தில் மூட்டைகளில் சேகரித்து வைத்து இருந்த நெல்மணிகள் முளைத்து இருந்தது. விவசாயிகள் கஷ்டப்பட்டு விவசாயம் செய்து, அறுவடை செய்து கொண்டு வரும் நெல்லை இந்த அரசு பாதுகாப்பாக வைத்திருக்க மாட்டார்கள்.
திமுக ஆட்சிக்கு வந்ததும், கான்கிரீட் வீடு கட்ட நாலு லட்சம் தருவேன் என்று சொன்னார் அமைச்சர் சக்கரபாணி. சந்தைக்கு குளிர்சாதன கிடங்கு, வீடில்லாத அனைவருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வீடுகள், நீண்டநாள் கோரிக்கையான பாதாள சாக்கடை திட்டம், வேலைவாய்ப்புகளை மேம்படுத்த தொழிற்பேட்டை என ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
காப்பிலயப்பட்டி ஊராட்சியில் விவசாய நிலங்கள் மத்தியில், 18 ஏக்கர் அளவில் கழிவுப் பொருள்கள் மேலாண்மை என்ற பெயரில், 25 டன் அளவுக்கு மருத்துவக் கழிவு முதலானவை குவித்து வைத்திருக்கிறார்கள். அவ்வப்போது இந்தக் கழிவுகளையும் எரித்து, சுற்றுச் சூழலைப் பாதிப்படையச் செய்கிறார்கள். சுற்றியிருக்கும் விவசாய நிலங்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
கண்வலிக் கிழங்கு விதைக் கொள்முதலிலும், அமைச்சர் சக்கரபாணி தலையீடு இருப்பதால், விவசாயிகளுக்கு 50% விலையே கிடைக்கிறது என்ற ஒரு குற்றச்சாட்டும் உள்ளது. மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் என்ற பெயரில், மின்சாரக்கட்டணம், பால் பொருள்கள் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு என அனைத்தையும் உயர்த்திவிட்டார்கள். அனைவருக்கும் கட்டணத்தை உயர்த்தி விட்டு, உரிமைத் தொகை மட்டும் தகுதியுள்ள மகளிருக்காம். ஏன் இந்த ஏமாற்று வேலை? 1996 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக வாக்களித்து வெற்றிபெறச் செய்துவரும் மக்களை வஞ்சித்துக் கொண்டிருக்கிறார் அமைச்சர் சக்கரபாணி. இதற்கு மேலும் மக்கள் உங்களை நம்பி வாக்களிக்க மாட்டார்கள் எனத் தெரிவித்தார்.