தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!
Sep 13, 2026, 04:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!

கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் எதிரொலி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 16, 2023, 04:03 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் தொடர்ச்சியாக, சென்னை, கோவை, தென்காசி உட்பட தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடந்து வருகிறது.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி அதிகாலை நேரத்தில் கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை பிரிவு (என்.ஐ.ஏ.) வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இச்சம்பத்தில் தொடர்புடைய பலரையும் என்.ஐ.ஏ. கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அவ்வப்போது தமிழகத்தில் சோதனையிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவை கார் வெடிப்பு சம்பந்தமாக இன்று அதிகாலை முதல் தமிழகம் முழுவதும் சுமார் 30 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், தென்காசி மாவட்டம் கடையநல்லூருக்கு இன்று அதிகாலை 5 மணிக்கு 2 கார்களில் வந்த 6 பேர் கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழு, ரசாலிபுரம் தெருவைச் சேர்ந்த முகமது இத்ரிஸ் என்பவரது வீட்டுக்குள் நுழைந்தது. இன்ஜினீயரான இவர், சென்னையில் ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது வீட்டில் இன்று அதிகாலை 5.30 மணி முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறை தரப்பில் விசாரித்தபோது, கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையின்போது, முகமது இத்ரிசின் செல்போனுக்கு அடிக்கடி தடை செய்யப்பட்ட இயக்கத்தில் இருந்து குறுந்தகவல்கள் வந்ததாகவும், அதனடிப்படையில் இன்று என்.ஐ.ஏ. குழுவினர் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.

அதேபோல, கோவையில் உள்ள அரபிக் கல்லூரியில் தீவிரவாத பயிற்சி அளிக்கப்படுவதாக தேசிய புலனாய்வு முகாமைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அக்கல்லூரியில் படித்தவர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் வீடுகளை குறிவைத்து  என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கோவையில் ஜி.எம்.நகர், உக்கடம், போத்தனூர், கரும்புக்கடை உட்பட 22 இடங்களிலும், சென்னையில் திரு.வி.க. நகரில் உள்ள முஜ்பீர் ரகுமான் என்பவரின் வீடு உட்பட மொத்தம் 30 இடங்களில் இச்சோதனை நடந்து வருகிறது.

Tags: Tamil NaduNiaRaid30 places
Share
Tweet
SendShare
Previous Post

பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடாது: மத்திய அமைச்சர் தகவல்!

Next Post

வஞ்சித்துவிட்டார் அமைச்சர் சக்ரபாணி – அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies