தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பேச்சுக்கு, முன்னாள் அமைச்சர் ஒருவர் மறுப்பு தெரிவித்திருந்தார். அவரது பேச்சுக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஆதாரத்தோடு பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் தனது எக்ஸ் பதிவில், நான் சமீபத்தில், மதுரையில் அண்ணாதுரை அவர்களுக்கு எதிராக தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பேசியதை குறிப்பிட்டிருந்தேன்.
நான் சமீபத்தில், மதுரையில் அண்ணாதுரை அவர்களுக்கு எதிராக தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் பேசியதை குறிப்பிட்டிருந்தேன். அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டதாகச் சொன்னார்கள். 1956ஆம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டாம் தேதி,…
— K.Annamalai (@annamalai_k) September 16, 2023
அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டதாகச் சொன்னார்கள். 1956 -ம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டாம் தேதி, மூன்றாம் தேதி, மற்றும் நான்காம் தேதி ஹிந்து நாளிதழில் இது குறித்த செய்தி வந்துள்ளது. முன்னாள் அமைச்சர் அண்ணன் அவர்கள் தவறாமல் படிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.