பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நீண்ட ஆயுளுடனும், நோய் நொடியின்றி நல் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்து நம் நாட்டை நெடுங்காலம் வழிநடத்த வேண்டி, நமோ கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பில், ஆயுஷ் ஹோமம் மற்றும் கோ பூஜை, கோ தானம் நடந்தது.
சென்னை தியாகராய நகரிலுள்ள தக்கர் பாபா வித்யாலயா பள்ளியில் நடந்த இந்நிகழ்ச்சியில், தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர் புருஷோத்தம் ருபாலா, மத்திய இணை அமைச்சர்கள் எல்.முருகன், வி.கே.சிங் மற்றும் தமிழக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, கோ தானம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க. மாநிலச் செயலாளர்கள் வினோஜ் பி.செல்வம், டால்பின் ஸ்ரீதர், ஊடகப் பிரிவு மாநிலத் தலைவர் ரெங்கா உட்பட பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில், பிரதமரின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு 73 பசுக்கள் தானமாக வழங்கப்பட்டன.