"பி.எம்.விஸ்வகர்மா" திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
Mar 15, 2026, 04:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“பி.எம்.விஸ்வகர்மா” திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

5 ஆண்டுகளில் 30 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 17, 2023, 12:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“பி.எம். விஸ்வகர்மா” என்கிற பெயரில் கைவினைக் கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 5 லட்சம் குடும்பங்கள் என 5 ஆண்டுகளில் 30 லட்சம் குடும்பத்தினர் பயனடைவார்கள்.

நாட்டின் 77-வது சுதந்திர தின விழாவில், தேசியக் கொடியேற்றி வைத்து உரையாற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ‘பி.எம். விஸ்வகர்மா’ என்ற பெயரில் பாரம்பரிய தொழில் கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, இத்திட்டத்திற்கு 13,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தின் கீழ், கைவினைக் கலைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு ‘பிரதமர் விஸ்வகர்மா சான்றிதழ்’ மற்றும் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

இத்திட்டம் 2023-2024 நிதியாண்டு முதல் 2027-2028 நிதியாண்டு வரை 5 ஆண்டுகள் அமலில் இருக்கும். இத்திட்டத்தின் முதல் தவணையாக 1 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லாக் கடன் வழங்கப்படுகிறது. 2-வது தவணையாக 2 லட்சம் வரை 5 சதவீத வட்டியுடன் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் உள்ள கைவினைக் கலைஞர்கள், கைவினைத் தொழிலாளர்கள் பயனடைவார்கள்.

இத்திட்டத்தின் கீழ் முதல் ஆண்டில் 5 லட்சம் குடும்பங்களும், மொத்தமாக 5 ஆண்டுகளில் 30 லட்சம் குடும்பங்களும் பயன்பெறும். இத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி விஸ்வகர்மா ஜெயந்தியான இன்று தொடங்கி வைத்தார். மேலும், நாடு முழுவதும் 70 இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இத்திட்டத்தின் கீழ் கொத்தனார், தச்சர், பொற்கொல்லர், கூடை, பாய், துடைப்பம் தயாரிப்பவர், குயவர், சிற்பிகள், கல் தச்சர்கள், கயிறு செய்பவர், பாரம்பரியமாக பொம்மைகள் செய்பவர், முடி திருத்தும் தொழிலாளர், தையல்காரர், மீன்பிடி வலை தயாரிப்பவர், படகு தயாரிப்பவர், கவசம் தயாரிப்பவர், பூமாலைகள் கட்டுபவர், சலவைத் தொழிலாளர், இரும்புக் கொல்லர், சுத்தியல் மற்றும் கருவிகள் செய்பவர்கள், பூட்டுகள் செய்பவர்கள், காலணி தைப்பவர், காலணி தொழிலாளா், காலணி செய்பவர் உள்ளிட்ட 18 வகையான தொழில்களில் ஈடுபடுவோர் நிதி பெற தகுதி உடையவர்களாவர்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

இந்திய மாணவி உயிரிழப்பு: காவல் அதிகாரியை நீக்கக் கோரி 6,700 பேர் மனு!

Next Post

பிரதமர் மோடி விஸ்வகர்மா தின வாழ்த்து!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies