இந்திய மாணவி உயிரிழப்பு: காவல் அதிகாரியை நீக்கக் கோரி 6,700 பேர் மனு!
Mar 15, 2026, 03:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய மாணவி உயிரிழப்பு: காவல் அதிகாரியை நீக்கக் கோரி 6,700 பேர் மனு!

அமெரிக்காவில் ரோந்து வாகனம் மோதியது!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 17, 2023, 12:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் காவல்துறையினரின் ரோந்து வாகனம் மோதி, இந்திய மாணவி உயிரிழந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரியை பணியில் இருந்து நீக்க வலியுறுத்தி, 6,700 பேர் கையெழுத்திட்டு மனு அனுப்பி இருக்கின்றனர்.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜான்வி கண்டூலா. இவர், அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் மாகாணத்திலுள்ள சியாட்டில் நகரில், முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்த சூழலில், சமீபத்தில் மாணவி ஜான்வி சாலையைக் கடக்க முயன்றபோது, அதிகவேகமாக வந்த காவல்துறை ரோந்து வாகனம் மோதியது. இதில், சுமார் 100 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்ட ஜான்வி கண்டூலா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேற்கண்ட காவல்துறை வாகனத்தை, கெவின் டேவ் என்ற அதிகாரி ஓட்ட, டேனியல் ஆடரெர் என்ற மற்றொரு காவல்துறை அதிகாரியும் உடனிருந்தார். மேற்கண்ட வாகனம் 120 கி.மீட்டர் வேகத்தில் வந்த நிலையில், விபத்துக்கு பிறகு சியாட்டில் காவல்துறை சங்கத் தலைவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய அதிகாரி டேனியல், வாகனம் 80 கி.மீ. வேகத்தில் மட்டுமே வந்ததாகக் கூறியதோடு, மாணவி குறித்து கேலியாக பேசி சிரித்தார்.

இந்த உரையாடல், காவல்துறை அதிகாரி டேனியல் ஆடரெரின் உடையில் இருந்த கேமராவில் பதிவானது. இந்த ஒளிப்பதிவு சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விபத்தை ஏற்படுத்தி, உயிரிழப்புக்கும் காரணமானதோடு, கேலி பேசி சிரித்த அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமெரிக்க வாழ் இந்தியர்களும் கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே, மேற்கண்ட விபத்து குறித்து சியாட்டில் நகர காவல்துறை அதிகாரிகள் சங்கத்துக்கு விளக்கமளித்துள்ள டேனியல் ஆடரெர், “நகைச்சுவையாக தனிப்பட்ட முறையில் பேசிய விவகாரம், கேமராவில் பதிவு செய்யப்படவில்லை என்று நம்பினேன். என் கடமைக்கும், நான் பேசியதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் சங்கம் அளித்திருக்கும் விளக்கத்தில், “விபத்து நடந்தபோது பேசிய உரையாடலின் ஒருபகுதி மட்டுமே வெளியாகி இருக்கிறது. மாணவிக்கு உதவும் வகையில் டேனியல் ஆடரெர் கூறிய கருத்துக்கள் எதுவும் அந்த ஒலிப்பதிவில் வெளியிடப்படவில்லை” என்று தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில், மாணவி குறித்து கேலி பேசிய டேனியல் ஆடரெரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் உட்பட 6,700 பேர் மனு ஒன்றில் கையெழுத்திட்டிருக்கின்றனர். இந்த மனு, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

Tags: 700 writamericaaccidentIndian studentpolice car6
ShareTweetSendShare
Previous Post

அசைக்க முடியாத தேசபக்திக்குச் சான்று: அமித்ஷா!

Next Post

“பி.எம்.விஸ்வகர்மா” திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Related News

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

Load More

அண்மைச் செய்திகள்

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies