இந்துக்களின் முதற்முழுக் கடவுளான விநாயகரின் பிறந்த நாளையொட்டி, விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த நன்நாளில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி இந்து மக்களின் முக்கியமான விழாவாகும். இந்த விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது.
இது இந்த நாட்டின் தேசிய விழாவாகவும், கலாச்சார விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. இப்படி புகழ் பெற்றதும், பாரம்பரியம் மிக்கதுமான விநாயகர் சதுர்த்தி விழாவை, நாடு முழுவதும் இந்துக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியையொட்டி, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, நாட்டு மக்கள் அனைவருக்கும், விநாயகர் சதுர்த்தி விழா வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துக்கள். விநாயக பெருமான் அனைவருக்கும் ஞானம், வலிமை, வெற்றி, மகிழ்ச்சி, வளம் ஆகியவற்றை வழங்கட்டும்.#விநாயகர்சதுர்த்திவாழ்த்துக்கள் pic.twitter.com/ZCctHNAmW1
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) September 18, 2023
இது தொடர்பாக, அவர் தனது எக்ஸ் பதிவில், விநாயகர் சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துக்கள். விநாயக பெருமான் அனைவருக்கும் ஞானம், வலிமை, வெற்றி, மகிழ்ச்சி, வளம் ஆகியவற்றை வழங்கட்டும் என தெரிவித்துள்ளார்.