கரூரில் புகழ்பெற்ற அருள்மிகு தாந்தோனிமலை அருள்மிகு வெங்கட்ரமண சுவாமி திருக்கோவிலில், புரட்டாசி மாத பெருவிழாவையொட்டி, மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பின்பே, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவுக்கு, கரூர் மாவட்ட பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்ட ஆட்சியரே, கரூர் கள்ளச்சாராய கம்பெனியும் அதையொட்டி இயங்கும் பார்களும் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் வரையறைப்படி தான் இயங்குகிறதா? என கேள்வி எழுப்பியவர்,
நீங்கள் குறிப்பிட்ட ஒரு குடும்பத்தை திருப்திப்படுத்தப் பெரும்பான்மை இந்து மக்கள் மனதைப் புண்படுத்துவதைப் பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்காது.
உடனடியாக தாந்தோன்றிமலை கல்யாண வெங்கரமணசுவாமி திருக்கோவில் புரட்டாசி விழாவிற்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை விலக்கப்படாவிட்டால், மாநில தலைவர் அண்ணாமலை அனுமதி பெற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மிகப்பெரும் போராட்டம் நடத்தப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மாவட்ட ஆட்சியராக எல்லா சமூக மக்களுக்கும் பொதுவானவராக நடந்து கொள்ளவேண்டும். மாறாக ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளராக நடந்து கொண்டால் கடும் எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டிவரும் என்று தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.