யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் ஹொய்சளர்களின் புனிதச் சின்னங்கள் சேர்க்கப்பட்டதற்குப் பிரதமர் நரேந்திர மோடி, மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது குறித்து யுனெஸ்கோ- வின் எக்ஸ் சமூக வலைதளப் பதிவைப் பகிர்ந்து பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:
ಭಾರತಕ್ಕೆ ಮತ್ತಷ್ಟು ಹೆಮ್ಮೆ!
ಹೊಯ್ಸಳರ ಭವ್ಯ ಮತ್ತು ಪವಿತ್ರ ಶಿಲ್ಪ ಸಂಕೀರ್ಣಗಳನ್ನು @UNESCO ವಿಶ್ವ ಪಾರಂಪರಿಕ ಸ್ಥಳಗಳ ಪಟ್ಟಿಯಲ್ಲಿ ಸೇರಿಸಲಾಗಿದೆ. ಹೊಯ್ಸಳ ದೇವಾಲಯಗಳ ಕಾಲಾತೀತ ಸೌಂದರ್ಯ ಮತ್ತು ಸೂಕ್ಷ್ಮ ಕುಸುರಿ ಕೆಲಸಗಳು ಭಾರತದ ಶ್ರೀಮಂತ ಸಾಂಸ್ಕೃತಿಕ ಪರಂಪರೆ ಮತ್ತು ನಮ್ಮ ಪೂರ್ವಿಕರ ಅಸಾಧಾರಣ ಶಿಲ್ಪ ಕೌಶಲ್ಯಕ್ಕೆ ಸಾಕ್ಷಿಯಾಗಿದೆ. https://t.co/cOQ0pjHr95
— Narendra Modi (@narendramodi) September 18, 2023
“இந்தியாவுக்கு மேலும் பெருமை கிடைத்துள்ளது! ஹொய்சளர்கள் கோவில்களின் அற்புதமான புனிதச் சின்னங்கள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஹொய்சளர்களின் கோயில்கள் காலத்தால் அழியாத அழகு மற்றும் நுணுக்கமான கலைத் திறன்களைக் கொண்டுள்ளன. இவை இந்தியாவின் வளமான கலாச்சாரப் பாரம்பரியம் மற்றும் நம் முன்னோர்களின் அசாதாரண கைவினைத்திறனுக்கு சான்றாகும்.” இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.