தேர்தல் ஆணையர் நியமன மசோதா நிறுத்தி வைப்பு!
Sep 13, 2026, 03:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தல் ஆணையர் நியமன மசோதா நிறுத்தி வைப்பு!

எதிர்கட்சிகளின் எதிர்ப்பால் பா.ஜ.க. முடிவு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 19, 2023, 05:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இதர தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதாவை, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யாமல் நிறுத்திவைக்க மத்திய பா.ஜ.க. அரசு முடிவு செய்திருக்கிறது.

பொதுவாக நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை, பட்ஜெட் கூட்டத்தொடர் (ஜனவரி முதல் மார்ச் வரை), மழைக்கால கூட்டத்தொடர் (ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள்) மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் (நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள்) என ஆண்டுக்கு 3 முறை முறை மட்டுமே கூட்டப்படும். அந்த வகையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைந்தது. இதன் பிறகு, டிசம்பர் மாதம்தான் குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கும்.

ஆனால், செப்டம்பர் மாதம் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, அறிவித்தார். அதன்படி, சிறப்புக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. வரும் 22-ம் தேதி வரை நடைபெறும் இக்கூட்டத்தொடரில், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இதர தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா, வழக்கறிஞராகள் திருத்த மசோதா, தபால் அலுவலக மசோதா, பத்திரிக்கை மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா ஆகிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்டது.

இதனிடையே, மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, இந்த மசோதாவும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், இத்கூட்டத்தொடரில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவிருக்கும் மசோதாக்கள் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் தொடர்பான 3 மசோதாக்கள்,  மூத்த குடிமக்கள் நல மசோதா 2023 ஆகியவையும் கூடுதலாக பட்டியலிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

அதேசமயம், எதிர்கட்சிகளால் குற்றம்சாட்டப்பட்ட, “ஒரே நாடு, ஒரே தேர்தல்” மற்றும் “இந்தியா – பாரதம் பெயர் மாற்றம்” ஆகியவை தொடர்பாக எவ்விதத் தகவல் வெளியாகவில்லை.

Tags: ParliamentSpecial Sessionlisted bills
Share
Tweet
SendShare
Previous Post

கடலோர பாதுகாப்பு ஒத்திகை ஆபரேஷன் சஜாக்!

Next Post

பிரதமர் மோடி  மகிழ்ச்சி!  

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies