பன்னோக்கு சரக்குப் போக்குவரத்துப் பூங்காவை மேம்படுத்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், ஒப்பந்தத்தில் கையெழுத்து!  
Jul 29, 2025, 08:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பன்னோக்கு சரக்குப் போக்குவரத்துப் பூங்காவை மேம்படுத்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், ஒப்பந்தத்தில் கையெழுத்து!  

Web Desk by Web Desk
Sep 19, 2023, 05:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெங்களூரில் பன்னோக்கு சரக்குப் போக்குவரத்துப் பூங்காவை மேம்படுத்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்குச் சொந்தமான நிறுவனமான தேசிய நெடுஞ்சாலைகள் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் லிமிடெட் (என்.எச்.எல்.எம்.எல்), பெங்களூருவில் ரூ. 1,770 கோடி மதிப்பீட்டில் பொது மற்றும் தனியார் கூட்டு செயல்பாட்டில் பன்னோக்கு சரக்குப் போக்குவரத்துப் பூங்காவை (மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ – எம்.எம்.எல்.பி) மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

அரசின் சிறப்புத் திட்டங்கள் அமைப்பு (எஸ்பிவி), பெங்களூரு எம்எம்எல்பி பிரைவேட் லிமிடெட் மற்றும் கன்செஸ்ஸனர் எஸ்பிவி மெஸர்ஸ் பாத் பெங்களூரு லாஜிஸ்டிக்ஸ் பார்க் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றுக்கு இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் பெங்களூரு ஊரக மாவட்டத்தில் உள்ள முதலலிங்கனஹள்ளியில் 400 ஏக்கர் பரப்பளவில் எம்.எம்.எல்.பி உருவாக்கப்பட்டு வருகிறது. பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்தின் கீழ் நாட்டில் செயல்படுத்தப்படும் முதல் மற்றும் மிகப்பெரிய எம்.எம்.எல்.பி.யாக இந்த திட்டம் அமையும்.

இது தேசிய நெடுஞ்சாலை 648, டபாஸ்பேட்டை முதல் ஓசூர் வரை மற்றும் வடக்கில் சாட்டிலைட் டவுன் ரிங் சாலை மற்றும் தெற்கில் பெங்களூரு – ஹூப்ளி – மும்பை ரயில் பாதையை ஒட்டி அமைந்துள்ளது.

பெங்களூரு எம்.எம்.எல்.பி,  பெங்களூரு விமான நிலையத்திலிருந்து 58 கிலோ மீட்டர் தொலைவிலும், பெங்களூரு நகர ரயில் நிலையத்திலிருந்து 48 கிலோ மீ்ட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

எம்.எம்.எல்.பி மூன்று கட்டங்களாக உருவாக்கப்படும். முதல் கட்டம் இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எம்.எம்.எல்.பி 45 ஆண்டு காலம் முடிவதற்குள் சுமார் 30 மில்லியன் மெட்ரிக் டன் (எம்.எம்.டி) சரக்குகளை கையாளும். அத்துடன் பெங்களூரு மற்றும் தும்கூர் போன்ற நீர்ப்பிடிப்பு பிராந்தியத்தில் உள்ள தொழில்துறை மண்டலங்களுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும்.

தேசிய நெடுஞ்சாலைகள் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் லிமிடெட் (என்.எச்.எல்.எம்.எல்), ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (ஆர்.வி.என்.எல்) மற்றும் கர்நாடகா தொழில்துறை பகுதி மேம்பாட்டு வாரியம் (கே.ஐ.ஏ.டி.பி) ஆகியவற்றுக்கு இடையில் ஒரு அரசு சிறப்புத் திட்ட அமைப்பு (எஸ்.பி.வி) ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் சரக்குப் போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதற்கான மத்திய அரசாங்கத்தின் முக்கிய முன்முயற்சியாக எம்.எம்.எல்.பி. (Multi-Modal Logistics Parks)  எனப்படும் பன்னோக்கு சரக்குப் போக்குவரத்துப் பூங்கா அமைந்துள்ளது.

Tags: national high waynhai
ShareTweetSendShare
Previous Post

இந்திய கடற்படையின், புதுமைக் கண்டுபிடிப்புகள்- உள்நாட்டுமயமாக்கல் தொடர்பான 2 வது கருத்தரங்கு!

Next Post

அம்மன் வேடத்தில் சோனியா காந்தி: பா.ஜ.க. கடும் கண்டனம்!

Related News

அலறும் அஜர்பைஜான் : இந்திய ஆயுதங்களை வாங்கி குவிக்கும் ஆர்மேனியா!

ஆப்ரேஷன் சிந்தூர் ஓயவில்லை, தொடரும்..! – ராஜ்நாத் சிங்

சீன ஹைப்பர் சோனிக் ஏவுகணையால் சிக்கல் : அமெரிக்காவின் B-21 ரைடரும் தப்ப முடியாது!

குடும்பம் குடும்பமாக வெளியேறிய தொழிலாளர்கள் : குப்பை நகரமாக மாறுகிறதா குருகிராம்?

AI வருகையால் அதிரடி மாற்றம் : 12000 பேரை பணிநீக்கம் செய்யும் TCS நிறுவனம்!

காசாவில் கடும் உணவுப் பஞ்சம் : தினமும் 10 மணி நேரம் போர் நிறுத்தம்!

Load More

அண்மைச் செய்திகள்

சதுரங்க நாயகி திவ்யா தேஷ்முக்!

பராக் ஒபாமாவை சீண்டும் டிரம்ப் : AI சித்தரிப்பால் மீண்டும் சர்ச்சை!

விளை நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை : கொந்தளிக்கும் விவசாயிகள்!

குடியிருப்புப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் – அண்ணாமலை

இஸ்ரோ – நாசா இணைந்து தயாரித்த ‘நிசார்’ செயற்கைக்கோள் : சிறப்பு அம்சங்கள்!

9 தீவிரவாத முகாம்கள் 22 நிமிடத்தில் முற்றிலுமாக அழிக்கப்பட்டது : ராஜ்நாத் சிங்

மகளிர் உலகக்கோப்பை செஸ் தொடரில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் சாம்பியன்!

ஈரோடு : மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து!

பஹல்காம் தாக்குதல் : தீவிரவாதிகள் என்கவுண்டர்!

சேலம் : சேதமடைந்து காணப்படும் பள்ளி வகுப்பறைகள் – சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies