இந்திய கடற்படையின், புதுமைக் கண்டுபிடிப்புகள்- உள்நாட்டுமயமாக்கல் தொடர்பான 2 வது கருத்தரங்கு!
Sep 14, 2026, 05:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய கடற்படையின், புதுமைக் கண்டுபிடிப்புகள்- உள்நாட்டுமயமாக்கல் தொடர்பான 2 வது கருத்தரங்கு!

Murugesan M by Murugesan M
Sep 19, 2023, 05:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய கடற்படையின், புதுமைக் கண்டுபிடிப்புகள் மற்றும் உள்நாட்டுமயமாக்கல் தொடர்பான 2 வது கருத்தரங்கு (ஸ்வவ்லாம்பன்-2023) அக்டோபர் 4 மற்றும் 5-ம் தேதிகளில் நடைபெறுகிறது.

இந்திய கடற்படையின் கடற்படை புதுமைக் கண்டுபிடிப்புகள் மற்றும் உள்நாட்டுமயமாக்கல் (என்ஐஐஓ) கருத்தரங்கின் 2வது பதிப்பான ‘ஸ்வவ்லாம்பன் 2023-ஐ அக்டோபர் 04 மற்றும் 05 தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஜூலை 2022 இல் நடைபெற்ற கருத்தரங்கின் முதல் பதிப்பில், பிரதமர் நரேந்திர மோடி, ‘ஸ்பிரிண்ட்’ முன்முயற்சியின் ஒரு பகுதியாக புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான 75 போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.

‘ஸ்பிரிண்ட் சவால் போட்டிகள்’, இந்திய கடற்படையில் உள்நாட்டு தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன, மேலும் விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக குறைந்தது 75 தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளை உருவாக்க கடற்படை உறுதிபூண்டுள்ளது.

ஸ்பிரிண்ட் என்பது பாதுகாப்பு கண்டுபிடிப்பு அமைப்புடன் (டிஐஓ) இணைந்து மேற்கொள்ளப்படும் ஒரு கூட்டு முயற்சியாகும். விரிவான ஆய்வுக்குப் பிறகு, டிஸ்க் 7 ஸ்பிரிண்ட் பிரிவில் (1.5 கோடி வரை மானியங்களுடன்) 113 வெற்றியாளர்களும், டிஸ்க் 7 ஸ்பிரிண்ட்-பிரைம் பிரிவில் (10 கோடி வரை மானியங்கள்) 5 வெற்றியாளர்களும் அறிவிக்கப்பட்டனர். மேலும் அனைத்து வெற்றியாளர்களாலும் முன்மாதிரிகளின் மேம்பாட்டுப் பணிகள் முன்னேற்றமடைந்து வருகிறது.

நீருக்கடியில் பயன்படுத்தப்படும் நீல-பச்சை லேசர்கள் உட்பட முக்கிய தொழில்நுட்பங்கள் முன்னேற்றமடைந்து வருகின்றன. பல்வேறு பயன்பாடுகளுக்காக செயற்கை நுண்ணறிவை (Al) அறிமுகப்படுத்துதல் மற்றும் கடல்சார் பணிகளுக்காக அதிநவீன செயல்பாட்டுத் தன்மை கொண்ட சிறிய ட்ரோன்களை உருவாக்குதல் போன்ற பணிகளும் நடைபெறுகின்றன.

புதுதில்லியில் அக்டோபர் 04 மற்றும் 05 தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ள “ஸ்வவ்லாம்பன்-2023” கருத்தரங்கின் போது சில நம்பிக்கைக்குரிய தொழில்நுட்பங்களின் நேரடி செயல் விளக்கம் உட்பட இந்த 75 முன்மாதிரிகளை காட்சிப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags: indian navy
Share
Tweet
SendShare
Previous Post

மீண்டும் அரிக்கொம்பன் – பீதியில் பொதுமக்கள்!

Next Post

பன்னோக்கு சரக்குப் போக்குவரத்துப் பூங்காவை மேம்படுத்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், ஒப்பந்தத்தில் கையெழுத்து!  

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies