சென்னை தாம்பரம் அருகே பாஜக நிர்வாகி ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடுத்துள்ள பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பீரி வெங்கடேசன் (வயது 33). இவர் பாஜகவில் பட்டியலின மண்டல தலைவராகப் பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில், மேற்குத் தாம்பரம் குட்வில் நகரில் உள்ள காலி மனையில், தலையில் வெட்டுக் காயங்களுடன், முகம் சிதைக்கப்பட்ட சிலையில் ஒரு உடல் கிடந்தது.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று, அந்த உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அப்போது, கொலை செய்யப்பட்டுக் கிடந்தது, சென்னை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த பீரி வெங்கடேசன் என்றும், இவர் பாஜகவில் பட்டியலின மண்டல தலைவராகப் பதவி வகித்து வருகிறார் என்பதும் தெரிய வந்தது.
வெங்கடேசனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது என்றும், இதன் காரணமாகக் கடந்த 9 -ம் தேதி 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இதனால், அவர்கள் மீது காவல்துறையினருக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அவர்கள் 3 பேரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
சென்னை தாம்பரத்தில் பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.