கடந்த 30 வருடம் படுத்த படுக்கையிலிருந்த நடிகர் பாபு காலமானார். அவருக்கு திரை உலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் பாரதிராஜாவின் இயக்கத்தில், கடந்த 1990-ம் ஆண்டு வெளியான திரைப்படம் என் உயிர்த் தோழன். இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் பாபு.
இதைத் தொடர்ந்து, பெரும் புள்ளி, தாயம்மா மற்றும் பொன்னுக்குச் சேதி வந்தாச்சு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் பாபு.
இந்த நிலையில், ஒரு திரைப்படத்தில் சண்டைக்காட்சியில் நடிக்கும் போது பாபு தவறி விழுந்தார். இதில், அவரது முதுகு தண்டுவடத்தில் பலத்த அடிபட்டது. இதனால், அவர் திரைப்படங்களில் நடிக்க அவரது உடல் ஒத்துழைக்கவில்லை.
இதையடுத்து, திரைத்துறையிலிருந்து ஒதுங்கிய அவர் கடந்த 30 ஆண்டுகளாகப் படுக்கையிலேயே இருந்து வந்தார். மரணத்தோடு போராடி வந்தார்.
இந்த நிலையில், இறந்துபோன நடிகர் பாபுவுக்கு திரையுலகைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.