ஆஸ்திரேலியா இந்திய அணிகள் மோதும் ஒரு நாள் போட்டிக்கான இந்தியா அணி வீரர்களை அறிவித்துள்ளது பிசிசிஐ.
செப்டம்பர் 22 முதல் 27 வரை நடைபெறும் மூன்றுப் போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட்த் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடவுள்ளன. இந்தப் போட்டியின் வீரர்கள் பட்டியல் பிசிசிஐ அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடரில் மொத்தம் மூன்றுப் போட்டிகள் நடைபெறும். அதில் முதல் இரண்டுப் போட்டிகளில் ஒரு அணியும் மூன்றாம் நாள் போட்டிக்கு அணியில் சில மறுத்தாலும் ஏற்பட்டுள்ளது.
முதல் இரண்டுப் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் :
இதில் கே.எல்.ராகுல் இந்திய அணியின் தலைவராகவும் ரவிச்சந்திர ஜடேஜா துணை தலைவராகவும் உள்ளனர். மேலும் ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர், ஆர் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது. ஷமி, முகமது. சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மூன்றாவதுப் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் :
இதில் ரோஹித் சர்மா இந்திய அணியின் தலைவராகவும், ஹர்திக் பாண்டியா துணை தலைவராகவும் உள்ளனர். சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஆர் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது. ஷமி, முகமது. சிராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 2022 க்குப் பிறகு முதல் முறையாக இந்தியாவின் ODI அணிக்கு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.