சாம்சன் போட்ட பதிவு - இரசிகர்கள் சோகம் !
Mar 15, 2026, 06:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாம்சன் போட்ட பதிவு – இரசிகர்கள் சோகம் !

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 19, 2023, 04:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆஸ்திரேலியத் தொடரில் கூட இடம் கிடைக்காத ஏமாற்றத்தில் சாம்சன் போட்ட பதிவால் இரசிகர்கள் சோகம்.

பரபரப்பாக நடைபெற்ற ஆசியக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்தியா விரைவில் சொந்த மண்ணில் நடைபெறும் 2023 ஐசிசி உலகக் கோப்பையில் ஆசியச் சாம்பியனாக களமிறங்க உள்ளது.

அதற்கு முன்பாக உலகக் கோப்பைக்கு இறுதிக்கட்டமாக தயாராகும் வகையில் வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்த தொடரில் கூட கேரளாவைச் சேர்ந்த நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காதது நிறைய இரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் தம்முடைய 2வது போட்டியை 4 வருடங்கள் கழித்து 2019-யில் தான் விளையாடினர். இருப்பினும் மனம் தளராமல் ஐபிஎல் தொடரில் போராடி வந்த அவர் கடந்த 2022இல் பெற்ற வாய்ப்புகளில் முதல் முறையாக அரை சதமடித்து ஆட்டநாயகன் விருது வென்று தொடர்வாய்ப்புகளை கொடுத்தால் அசத்துவேன் என்பதை நிரூபித்தார்.

ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த ஆசியக் கோப்பைத் தொடரிலும் அவர் தேர்வாகவில்லை. அதனால் உலகக்கோப்பையில் தான் வாய்ப்பு கிடைக்கவில்லை, இந்த ஆஸ்திரேலியா தொடரிலாவது வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்த சஞ்சு சாம்சன் ஏமாற்றமடைந்து தற்போது முகநூல் பக்கத்தில் சிரித்த முகத்தை பிரதிபலிக்கும் ஒரே ஒரு ஸ்மைலியை பதிவிட்டுள்ளார்.

அதை பார்க்கும் ரசிகர்கள் அதன் பின் ஏராளமான வேதனையும் வலியும் வார்த்தைகளும் இருந்தும் எதாவது பேசினால் அரைகுறை வாய்ப்புகளும் கிடைக்காமல் போய்விடும் என்ற அர்த்தத்தில் நீங்கள் இப்படி பதிவிட்டுள்ளதை புரிந்து கொள்ள முடிவதாக சோகத்தை வெளிப்படுத்துகின்றனர்.

Tags: Cricket
ShareTweetSendShare
Previous Post

ஆசிய விளையாட்டு போட்டி: இன்று இந்தியா விளையாடுகிறது!

Next Post

மும்பை ஐ.ஐ.டி. மாணவருக்கு 3.7 கோடி சம்பளம்!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies