2023 -ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடர், வரும் அக்டோபர் 5-ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.
இந்த போட்டிகளைச் சிறப்பு மாடத்தில் இருந்து காண கோல்டன் டிக்கெட் ஃபார் இந்தியன் ஐகான்ஸ் என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு டிக்கெட் வழங்கப்படுகிறது.
குறிப்பாக, ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த டிக்கெட் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் அண்மையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் கிரிக்கெட் வீரர் பாரத ரத்னா சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த்துக்கு, கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டது. இதற்கான டிக்கெட்டை, பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, சென்னைக்கு வந்து, சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் நேரில் வழங்கினார்.
இதனைப் பெற்றுக் கொண்ட நடிகர் ரஜினி, பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், கிரிக்கெட் போட்டியைக் காண ஆர்வமுடன் இருப்பதாகவும், கிரிக்கெட் குறித்து பல்வேறு விஷயங்கள் ஜெய்ஷாவிடம் மனம்விட்டு பேசியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.