தமிழகத்தில் சனாதனத்தை அழித்தால்தான் தீண்டாமையும் அழியும் என திமுக இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசுகையில், தமிழகத்தில் தீண்டாமை கொடுமை நிலவி வருவதாகத் கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதில் தருவதாக நினைத்து, திமுக இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மீண்டும் சர்ச்சைக் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என். ரவியின் குற்றச்சாட்டு குறித்து, அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, தீண்டாமையை ஒழிக்கத்தான் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்கிறோம். எனவே, சனாதனம் அழிந்தால்தான் தீண்டாமையும் அழியும் என்றார்.
அவரது இந்த பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.