ஆந்திராவின் புதிய தலைநகரம் விசாகப்பட்டினம்!- ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு
Sep 12, 2026, 10:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆந்திராவின் புதிய தலைநகரம் விசாகப்பட்டினம்!- ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு

Murugesan M by Murugesan M
Sep 20, 2023, 06:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆந்திராவின் புதிய தலைநகரமாக விசாகப்பட்டினம்  செயல்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். அக்டோபர் 23ம் தேதி முதல் விசாகப்பட்டினத்தில் இருந்து ஆட்சி நிர்வாகம் நடத்தப்படும்.

ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி அமைந்ததும், ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார். அதாவது, அமராவதியில் சட்டசபையும், கர்னூலில் உயர்நீதிமன்றமும், விசாகப்பட்டினத்தில் தலைமைச் செயலகமும் அமைக்க முடிவு செய்தார்.

இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கில் ஆந்திர தலைநகராக அமராவதியே தொடர வேண்டும் என ஆந்திர உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அப்போது, அமராவதியே தலைநகராக தொடர வேண்டும் என அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு தடைவிதிக்கப்பட்டது. இவ்வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த சூழ்நிலையில் ஆந்திராவின் தலைநகரை விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்போவதாக ஜெகன்மோகன் அறிவித்திருந்தார்.

முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் இன்று நடைப்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில், தசரா பண்டிகையின் முக்கிய நாளான விஜயதசமி (அக்டோபர் 23) முதல் விசாகப்பட்டினம் ஆந்திர தலைநகராக செயல்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டத்தில் பேசிய ஜெகன்மோகன்,  ‘அக்டோபர் 23ம் தேதி முதல் விசாகப்பட்டினத்தில் இருந்து ஆட்சி நிர்வாகம் நடத்தப்படும். விசாகப்பட்டினத்தில் அரசு அலுவலகங்களை தேர்வுச் செய்வதற்கான குழுவை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து, முன்கூட்டியே தேர்தல் தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

முன்னதாக ஆந்திராவுக்கு குண்டூர் – விஜயவாடா இடையே மாநிலத்தின் மையப்பகுதியில் உள்ள அமராவதியை தலைநகரமாக மாற்ற அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்தார். அதன்படி, அமராவதியில் தலைமைச் செயலகம், சட்டசபை அமைக்கப்பட்டு, அங்கேயே சில சட்டசபை கூட்டங்களும் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Tags: visakapatinamjagan mohan reddy
Share
Tweet
SendShare
Previous Post

உதயநிதி ஸ்டாலின் மீண்டும் சர்ச்சைப் பேச்சு!

Next Post

கேங்மேன் பணிக்கு 5,336 தேர்வாளர்களுக்குப் பணி வழங்காமல் வஞ்சிக்கிறது திமுக அரசு- அண்ணாமலை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies