உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாடலை ஐ.சி.சி. வெளியிட்டிருக்கிறது. இப்பாடலுக்கு பிரபல இசையமைப்பாளர் ப்ரீதம் இசையமைத்துள்ளார்.
50 ஓவர் உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர் 5ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு கிரிக்கெட் உலகக்கோப்பைக்கு முன்பாகவும் அந்தத் தொடரில் பங்குபெறும் நாடுகள் குறித்த காட்சிகளுடன் கூடிய ஒரு பாடலை வெளியிடுவார்கள்.
அந்த பாடல் மற்றும் அந்த காட்சிகள் உலகக்கோப்பையில் பங்கு பெறும் நாடுகள் மற்றும் அவர்களின் முக்கிய வீரர்கள் அல்லது கிரிக்கெட்டுக்காக வீரர்களின் உழைப்பு என ஏதோ ஒரு முக்கியமான, மனதை தொடும் விஷயத்தை மையக் கருத்தாக வைத்து வெளியிடுவார்கள்.
இந்நிலையில் அந்தப் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலுக்கு ‘தில் ஜாஷ்ன் போலே’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு பிரபல இசையமைப்பாளர் ப்ரீதம் இசையமைத்துள்ளார். மேலும் இந்த பாடலில் பாலிவுட் நடிகர் ரண்வீர் சிங் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் சாஹலின் மனைவி தனஸ்ரீ வர்மா ஆகியோர் நடித்துள்ளனர்.