ஆண்டுதோறும் செப்டம்பர் 21ம் தேதி உலக அல்சைமர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக அல்சைமர் தினம் அல்சைமர் மற்றும் டிமென்ஷியா நிலை பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கக் கொண்டாடப்படுகிறது.
ஆண்டுதோறும் செப்டம்பர் 21ம் தேதி உலக அல்சைமர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினம் அல்சைமர் நோயை பற்றியும் அதனோடு தொடர்புடைய பொதுவான முதுமை மறதியான டிமென்ஷியா நிலை பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கவும் கொண்டாடப்படுகிறது.
1901-ஆம் ஜெர்மனியை சேர்ந்த மனநல மருத்துவர் அலோயிஸ் அல்சைமர், ஒரு 50 வயதான ஜெர்மன் பெண்ணுக்கு இந்நோயின் முதல் நிகழ்வை கண்டறிந்தார். எனவே இந்த கோளாறுக்கு அவரது பெயரே சூட்டப்பட்டது. கடந்த 1984-ல் Alzheimer Disease International உருவாக்கப்பட்டாலும், 1994-ல் தான் செப்டம்பர் 21 உலக அல்சைமர் தினமாக அறிவிக்கப்பட்டது.
உலக நாடுகளில் வசிக்கும் மக்களில் குறிப்பிட்ட சதவீதத்தினர் 60 வயதை கடந்த முதியவர்கள் இருக்கின்றனர். இவர்களது எண்ணிக்கையில் காணப்படும் அதிகரிப்பு காரணமாக இவர்களுக்கு வர கூடிய நோய் ஆபத்தும் அதிகரித்து காணப்படுகிறது.
இதில் அல்சைமர் எனப்படும் அறிவாற்றல் இழப்பு அல்லது ஞாபக மறதி நோய் மிகவும் பொதுவான ஒரு நோய் நிலையாக இருக்கிறது. சாதாரண மறதி நோய் தானே அல்சைமர் என்று இதை கடந்து சென்று விட முடியாது. ஏனென்றால் வயதானவர்களின் மூளை செல்களை சிறிது சிறிதாக சிதைக்கும் தன்மை கொண்டது. அல்சைமர் நோயால் முதியவர்கள் படிப்படியாக தங்களது நினைவாற்றலை இழந்து, ஒரு கட்டத்தில் அவர்கள் தங்களையும், சுற்றத்தாரை பற்றிய நினைவுகளையும் கூட இழக்க வைத்து விடும் அளவுக்கு மோசமானது இந்த அல்சைமர் நோய்.