ஜி 20 மாநாட்டின் வெற்றியை உறுதி செய்வதற்காக உழைத்த ஜி20 குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடுகிறார்.
ஜி 20 உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல்முறையாக டெல்லியில் கடந்த செப்டம்பர் 9, 10, ஆகிய நாட்கள் பிரகதி மைதானம் பாரத மண்டபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் மையப் பொருளாக ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்று இருந்தது. இந்த உச்ச மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ஜி 20 உச்சி மாநாடு சிறப்பாக நடைப்பெற்ற நிலையில் இன்று மாலை 6 மணிக்கு பாரத் மண்டபத்தில் ஜி 20 குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடுகிறார்.
இந்த கலந்துரையாடலில் ஜி 20 உச்சிமாநாட்டின் வெற்றிக்கு பங்களித்த சுமார் 3000 பேர் பங்கேற்க உள்ளனர். உச்சிமாநாட்டை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்வதற்காக அடித்தட்டு அளவிலிருந்து அனைத்து மட்டத்திலும் பணியாற்றியவர்கள் இதில் அடங்குவர்.
இதில் பல்வேறு அமைச்சகங்களைச் சேர்ந்த கிளீனர்கள், ஓட்டுநர்கள், வெயிட்டர்கள் மற்றும் பிற ஊழியர்கள் அடங்குவர். இந்த கலந்துரையாடலில் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.