பஞ்சாப் போலீசார் மாநிலம் முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டர் கும்பல் கோல்டி பிரார் உடன் இருக்கும் சதீந்தர்ஜீத் சிங்கை பிடிக்கும் நடவடிக்கை தொடர்பாக சோதனை நடத்தினர். மாநிலத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் நடவடிக்கையை கண்காணித்து வருகின்றனர். பட்டியலிடப்பட்ட குண்டர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சட்ட நடைமுறைகள் நிறைவடைந்தவுடன் அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,” என பஞ்சாப் காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜிபி, அர்பித் சுக்லா, தனியார் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
பாடகர் சித்து மூஸ் வாலா கொல்லப்பட்ட வழக்கில் கோல்டி ப்ரார் குற்றம் சாட்டப்பட்டவர். பஞ்சாபி பாடகரைக் கொல்ல குண்டர்கள் லாரன்ஸ் பிஷ்னோய் உடன் பிரார் இனைந்து சதி செய்ததாகக் கூறப்படுகிறது. அவர் கனடாவில் பதுங்கி இருப்பதாகவும், காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
மோகா, ஃபெரோஸ்பூர், டர்ன் தரன் மற்றும் அமிர்தசரஸ் கிராமப்புறம் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கொலை முயற்சி, கிரிமினல் சதி மற்றும் சட்டவிரோத துப்பாக்கி சப்ளை செய்ததாக பிராருக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) பணம் வெகுமதியாக அறிவித்தனர்.பயங்கரவாதக் குழுவான Babbar Khalsa International (BKI) ஐச் சேர்ந்தவர்கள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்ததற்காக, கனடாவைத் தளமாகக் கொண்ட, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் 43 கும்பல்களை NIA பட்டியலிட்டுள்ளது. அதில் கோல்டி ப்ரார், ராஜேஷ் குமார், பிரின்ஸ், அனில் வி மற்றும் முகமது ஷாபாஸ் ஆகியோரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டதற்குப் பின்னணியில் இந்திய அரசாங்கம் இருப்பதாகக் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்தியாவில் நியமிக்கப்பட்ட பயங்கரவாதி நஜ்ஜார், கடந்த ஜூன் 18- ஆம் தேதி கனடாவின் சர்ரே, பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று குற்றம் சாட்டினார்.