புதுச்சேரி வில்லியனூர் பேக்கரியில் நிகழ்ந்த கொலை வழக்கில் 13 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள வில்லியனூரில் ஒரு பேக்கரி முன்பு மார்ச் 26 -ஆம் தேதி அன்று மோட்டார் மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் செந்தில் குமரன் என்பவர் மீது வெடி குண்டுகளை வீசியும், கத்தியால் தாக்கியும் படுகொலை செய்தனர்.
இதில், சம்பவ இடத்திலே செந்தில் குமரன் துடிதுடிக்க உயிரிழந்தார். இது தொடர்பாக, வில்லியனூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு, தேசியப் பாதுகாப்பு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டது.இதனையடுத்து, இந்த வழக்கு சூடு பிடிக்க ஆரம்பித்தது. கொலையாளிகளைத் தேடி தேசியப் பாதுகாப்பு முகமை வேகம் காட்டியது. தொடர் விசாரணை நடத்தியது.
இந்த நிலையில், புதுச்சேரி வில்லியனூரில் குண்டு வெடிப்பு வழக்கில் 13 பேர் மீது தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான நித்தியானந்தம் மற்றும் அவரது கூட்டாளிகள் விக்னேஷ், சிவசங்கர் ராஜா, பிரதாப், கார்த்திகேயன், வெங்கடேஷ், ராஜா மணி, ஏழுமலை, கதிர்வேல், ராமச்சந்திரன், லட்சுமணன், திலீபன் மற்றும் ராமநாதன் ஆகியோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், செந்தில்குமார் படுகொலை செய்யப்பட்டபோது, பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், ரத்தக்கரை படிந்த கத்திகள் ஆகியவற்றை, தேசிய புலனாய்வு முகமை ஏற்கனவே கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.