மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும் என தாக்கல் செய்த பொதுநல மனுவை உச்ச நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுனில் அஹ்யா என்பவர் பொது நல மனு தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இவிஎம் இயந்திரம் மற்றும் விவிபேட் இயந்திரங்களின் மூலக்கூறுகளை வழங்க வேண்டும் என்று அப்போது மனுதாரர் கோரிக்கை விடுத்தித்தார். இது தொடர்பாக தாம் 3 முறை தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்திருந்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என எனது புகார் தெரிவித்தார்.
இந்த வழக்கில், இரு தரப்பினும் ஏற்கனவே, தங்களது வாதத்தை முன்வைத்திருந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டது.
அப்போது, அரசியல் சாதனத்தை மீறி தேர்தல் ஆணையம் செயல்பட்டது என்பதற்கு எந்தவித ஆதாரமும் தாக்கல் செய்யவில்லை. தேர்தல்களை தேர்தல் ஆணையமே நடத்தி வருகிறது. அதில் ஏதாவது குறைபாடு இருந்தால் நீதிமன்றத்தில் முறையிடலாம். ஆனால், அதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், மின்னணு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என்பதற்கான எந்த ஆதாரத்தையும் மனுதாரர்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கவில்லை. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்.