இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றிப் பெற்றது. இதன் மூலம் ODI தரவரிசை பட்டியலில் இந்திய அணி 117 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
ஏற்கனவே டி20- யில் 264 புள்ளிகளுடனும், டெஸ்ட் போட்டியில் 118 புள்ளிகளுடனும் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதன் மூலம் டி20, டெஸ்ட், ODI என மூன்றிலும் முதலிடம் பிடித்து இந்திய அணி கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல்கல் சாதனையை படைத்துள்ளது.
உலக கிரிக்கெட் வரலாற்றில் ODI, டி20, டெஸ்ட் என மூன்று வடிவத்திலும் ஒரு அணி முதலிடத்தை பிடிப்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன் 2012 யில் தென்னாப்பிரிக்க அணி இந்த சாதனையை படைத்திருந்தது.
இதற்கு முன் ஒடிஐ கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி முதலிடத்தில் இருந்தது. ஒருவேளை இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ODI போட்டியில் இந்தியாவிற்கு பதில் ஆஸ்திரேலியா வெற்றிப் பெற்றிருந்தால், ஆஸ்திரேலியா ODI- யில் முதலிடம் பிடித்திருக்கும்.
மேலும் இந்தியா இந்த மைல்கல் சாதனையைத் தக்கவைத்துக் கொள்ள மீதமுள்ளம் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்தத் தொடரை முழுமையாக கைப்பற்ற வேண்டும்.