பாரதத்தின் பாதுகாப்பு அரணாக நீதித்துறை உள்ளது! - பிரதமர் மோடி பெருமிதம். 
Aug 20, 2025, 01:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரதத்தின் பாதுகாப்பு அரணாக நீதித்துறை உள்ளது! – பிரதமர் மோடி பெருமிதம். 

Web Desk by Web Desk
Sep 23, 2023, 05:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“பாரதத்தின் பாதுகாப்பு அரணாக நீதித்துறை உள்ளது என்றும், சட்டம் தங்களுக்கே சொந்தம் என்பதைக் குடிமக்கள் உணர வேண்டும் என்றும், பாரதத்தின் புதிய சட்டங்களை எளிய மொழியில் மக்களிடம் கொண்டு சென்று வருகிறோம்” எனப் பாரதப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாடு 2023 -ஐ பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு சட்டத் தலைப்புகளில் கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்த மாபெரும் கூட்டத்தில் பிரதமர் மோடி சிறப்புறையாற்றினார். அப்போது பேசிய அவர், “உலகளாவிய சட்ட நிபுணர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இங்கிலாந்து சான்சலர் அலெக்ஸ் சாக் மற்றும் இங்கிலாந்து பார் அசோசியேஷன் பிரதிநிதிகள், காமன்வெல்த் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் நாடு முழுவதிலும் உள்ள வழக்கறிஞர்கள் கலந்து கொண்டுள்ள இந்தக் கூட்டத்தில் நானும் கலந்து கொண்டது மிகவும் பெருமையாக உள்ளது.

பாரதத்திற்கு வருகை தந்த வெளிநாட்டுப் பிரமுகர்களை வரவேற்கிறேன். அதே வேளையில், இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த இந்திய வழக்குரைஞர் சங்கத்திற்கு எனது நன்றியைத் தெரிவிக்கிறேன்.

எந்தவொரு நாட்டின் வளர்ச்சியிலும் சட்டத்துறையின் பங்கு முக்கியமானது. கடந்த பல ஆண்டுகளாக, நீதித்துறையும் வழக்கறிஞர்களும் பாரத நாட்டின் நீதித்துறையின் பாதுகாவலர்களாக உள்ளனர். சுதந்திரப் போராட்டத்தில் சட்ட வல்லுநர்களின் பங்கு மிக முக்கியமானது.

மகாத்மா காந்தி, பாபா சாகேப் அம்பேத்கர், பாபு ராஜேந்திர பிரசாத், ஜவஹர்லால் நேரு, சர்தார் படேல், லோக்மான்ய திலகர், வீர சாவர்க்கர் ஆகியோர் எல்லாம் சிறந்த சட்ட வல்லுநர்கள். அதனால்தான் நமக்குச் சுதந்திரம் சாத்தியமானது.

நமக்குச் சட்டத்தின் மூலம் கிடைத்த அனுபவங்கள் பாரதத்தின் அடித்தளத்தை வலுப்படுத்த உதவியது. பாரபட்சமற்ற நீதி அமைப்பு பாரதத்தின் மீதான நம்பிக்கையை உலக அளவில் அதிகரித்துள்ளது.

பல வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளுக்குத் தேசம் சாட்சியாக இருக்கும் இந்த அற்புதமான தருணத்தில், மக்களவை மற்றும் சட்ட மன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் “நாரி சக்தி வந்தன்அதினியம்” மக்களவை மற்றும் மாநிலங்கள் அவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

“நாரி சக்தி வந்தன் சட்டம்” இந்தியாவில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்குப் புதிய திசையையும் ஆற்றலையும் வழங்கும்.

சமீபத்தில், புதுடெல்லி நடந்து முடிந்த ஜி20 உச்சி மாநாட்டில், பாரதத்தின் ஜனநாயகம் மற்றும் இராஜதந்திரம் ஆகியவற்றை உலக நாடுகள் பாராட்டியுள்ளது.

ஒரு மாதத்திற்கு முன்பு, அதாவது இதே நாளில், நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் -3 வெற்றிகரமாகத் தரையிறக்கிய உலகின் முதல் நாடு இந்தியா என்ற பெருமையைப் பெற்றோம்.

தன்னம்பிக்கை நிறைந்த இன்றைய பாரதம் வரும் 2047-ம் ஆண்டுக்குள் ‘வளர்ந்த பாரதம்’ என்ற இலக்கை அடையப் பாடுபடுவோம். வளர்ந்த நாடு என்ற இலக்கை அடையப் பாரதத்தில் உள்ள சட்ட அமைப்புக்கு வலுவான, சுதந்திரமான மற்றும் சார்பற்ற அடித்தளம் தேவை. அதனை உருவாக்கியுள்ளோம்.

எனவே, சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாடு 2023 வெற்றிகரமாக மாநாடாக மாறியுள்ளது. ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளில் உள்ள சிறந்தவற்றை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்கு, இன்றைய உலகின் ஆழமான தொடர்பு உதவி செய்கிறது.

ஆனாலும், இன்றும் கூட ஒரு நாட்டின் எல்லைகள் மற்றும் அதிகார வரம்பைப் பற்றிக் கவலைப்படாத சிலர் உலகில் உள்ளனர். எனவே, ஆபத்துகள் உலக அளவில் இருக்கும்போது, அவற்றைக் கையாள்வதற்கான வழிகளும் உலக அளவில் இருக்க வேண்டும்.

உலக அளவில், சைபர் பயங்கரவாதம், பண மோசடி மற்றும் செயற்கை நுண்ணறிவைத் தவறாகப் பயன்படுத்தும் சாத்தியக்கூறுகள் பெருகியுள்ளது. இது போன்ற பிரச்சினைகளைக் கையாள உலக அளவில் ஒரு கட்டமைப்பு தேவை. இதற்கு, உலகளாவிய வலுவான சட்டக் கட்டமைப்பு தேவை.

நாடு முழுவதும், ஏன் உலகம் முழுவதும் வர்த்தகப் பரிவர்த்தனைகளில் சிக்கல்கள் அதிகரித்து வருகிறது. இதனால்தான், பாரதத்தில், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பாரம்பரிய முறைகளை பயன்படுத்தி வருகிறோம். இதற்காக, அரசு மத்தியஸ்த சட்டத்தை இயற்றியுள்ளது.

இதேபோன்று, சட்டச் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதில், லோக் அதாலத் பெரும் பங்கு வகிக்கின்றது. கடந்த 6 ஆண்டுகளில் லோக் அதாலத் மூலம் சுமார் 7 லட்சம் வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் தீர்ப்புகள் அனைத்தும் சாமானிய மக்களும் அறிந்து கொள்ளும் வகையில், அவரவர் தாய் மொழி மூலம் எளிமையாக்கப்பட்டு வருகிறது. சட்டத்தைப் புரிந்து கொள்வதற்கு வசதியாக பல்வேறு மொழிகளில் தீர்ப்புகள் மொழி பெயர்க்கப்பட்டு வருகின்றன. மேலும், புதிய சட்டங்களை அவரவர் தாய் மொழியில் அறிந்து கொள்வதற்கு வழி வகை செய்யப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை இந்தி, தமிழ், குஜராத்தி மற்றும் ஒரியா ஆகிய 4 உள்ளூர் மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதற்கு, எனது பாராட்டுத் தெரிவித்துக் கொள்கிறேன். இது நீதித்துறையில் ஏற்பட்டுள்ள மகத்தான ஒரு மாற்றம்.

தொழில்நுட்பம், சீர்திருத்தங்கள் மற்றும் புதிய நீதித்துறை செயல்முறைகள் மூலம் சட்ட செயல்முறைகளை நெறிப்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டியதன் அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.

நவீனத் தொழில்நுட்ப முன்னேற்றம் நீதித்துறைக்கு புதிய வழிகளைத் திறந்துள்ளது. எனவே, சட்டத்தின் மூலம் தொழில்நுட்ப சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அதற்கு உதவி செய்ய அரசு தயாராக உள்ளது “என்றார்.

இந்த நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி, இந்திய பார் கவுன்சில் தலைவர் துஷார் மேத்தா, இங்கிலாந்து சான்சலர் அலெக்ஸ் சாக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: prime minister narendra modiinternational lawyers conference
ShareTweetSendShare
Previous Post

இராணுவத்தின் சிறப்புப் படை வீரர்கள் இரவில் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி பயிற்சி!

Next Post

ஆசிய விளையாட்டு ஆடவர் டேபிள் டென்னிஸ் : இந்திய அணி வெற்றி !

Related News

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

ஜோர்டான் : பெட்ராவில் குவியும் சுற்றுலா பயணிகள்!

பாக். விமானப்படை தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது உண்மை – நவாஸ் ஷெரீப்பின் உதவியாளர் நஜாம் சேதி

அமெரிக்காவில் இந்திய முறைப்படி வணக்கம் வைத்த இத்தாலி பிரதமர் : வீடியோ வைரல்!

கள்ளக்குறிச்சி : புதிய பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்தை மாற்றக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆஸ்திரேலியா : பனிச்சறுக்கு விளையாடி மகிழ்ந்த வீரர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய தூதுக்குழுவின் ஜெட் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப கட்டணம் வசூல்!

கோவை : ஆற்றுப் பால தடுப்பு சுவரில் ஏறி இளைஞர் அட்டகாசம் – போலீசார் விசாரணை!

செங்கல்பட்டு : சிலம்ப யுக்திகளை செய்துகாட்டி அசத்திய வெளிநாட்டு தற்காப்பு கலைஞர்கள்!

இந்தோனேசியா : சூப்பர் மார்க்கெட்டிற்குள் புகுந்த முதலை!

திருவள்ளூர் – நீர் நிலைகளில் தண்ணீர் மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி!

ரயில் பாதையில் சோலார் பேனல்கள் அமைத்து மின்சாரம் உற்பத்தி : இந்திய ரயில்வே

ராமநாதபுரம் : மது அருந்திவிட்டு அதிவேகமாக ஆட்டோ ஓட்டும், ஓட்டுநர்கள் – பொதுமக்கள் அச்சம்!

நெல்லை : அரசு மருத்துவமனை மேற்கூரையில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்த அவலம்!

காஞ்சிபுரம் : 6-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றவர் கைது!

தாய்லாந்து : வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர் மீட்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies