2 வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்த ரிசர்வ் வங்கி
Mar 15, 2026, 09:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2 வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்த ரிசர்வ் வங்கி

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 23, 2023, 07:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இரண்டு வங்கிகளின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்ததால், குறிப்பிட்ட வங்கியைச்  சேர்ந்த வாடிக்கையாளர்கள் வங்கியில் பணம் எடுக்க முடியாது.

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் மூன்று வங்கிகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பல வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக திருவனந்தபுரம் அனந்தசயனம் கூட்டுறவு வங்கியின் உரிமம் ரத்து செய்யப்படுவதாக செப்டம்பர் 21- ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

தற்போது மேலும் இரண்டு வங்கிகளின் உரிமங்களையும் மத்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. அவர்களின் வங்கி வணிகம் தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி தெரிவிக்கையில்,
கர்நாடகாவில் உள்ள மல்லிகார்ஜுனா பட்டான கூட்டுறவு வங்கி நியாமிதா (மஸ்கி, கர்நாடகா) மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள தேசிய கூட்டுறவு வங்கி லிமிடெட் (பஹ்ரைச், உபி) ஆகிய இரண்டு வங்கிகள் தங்கள் வங்கித் தொழிலைத் தொடர அனுமதித்தால், அது பொது நலனைப் பாதிக்கும்.

இந்த வங்கிகளுக்கு போதிய மூலதனம் மற்றும் வருவாய் ஈட்டும் திறன் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனால் இந்த இரண்டு வங்கிகளும் வங்கி ஒழுங்குமுறை சட்டம் 1949 இன் பிரிவு 56, பிரிவு 11 (1) மற்றும் பிரிவு 22 (3)(D) ஆகியவற்றின் விதிகளுக்கு இணங்கத் தவறிவிட்டன. அது மட்டுமல்லாமல், இந்த வங்கியால் அதன் முழுப் பணத்தையும் செலுத்த முடியவில்லை. இவை வைப்பாளர்களின் நலன்களுக்கு தீங்கு விளைவிப்பவை என்றும் மத்திய ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

செப்டம்பர் 22 முதல் இவ்விரண்டு வங்கி வணிகத்தை ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது. டெபாசிட்களை ஏற்றுக்கொள்வது மற்றும் டெபாசிட்களை திருப்பிச் செலுத்துவதும் இதில் அடங்கும். டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரண்டி கார்ப்பரேஷன் (டிஐசிஜிசி) விதிமுறைகளின் கீழ், ஒவ்வொரு டெபாசிட்டரும் ரூ. 5 லட்சம் வரை தனது டெபாசிட்களை கோருவதற்கு உரிமை பெறுவார்கள்.

Tags: IndiareservebankofindiaBank Scam
ShareTweetSendShare
Previous Post

மகளிர் முன்னேற்றத்திற்காகவே உழைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!-மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் புகழாரம்!

Next Post

மன்னிப்பு கேட்காவிட்டால் சட்ட நடவடிக்கை! திமுகவுக்கு ஆர்எஸ்எஸ் எச்சரிக்கை

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies