மன்னிப்பு கேட்காவிட்டால் சட்ட நடவடிக்கை! திமுகவுக்கு ஆர்எஸ்எஸ் எச்சரிக்கை
Jul 27, 2025, 09:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மன்னிப்பு கேட்காவிட்டால் சட்ட நடவடிக்கை! திமுகவுக்கு ஆர்எஸ்எஸ் எச்சரிக்கை

Web Desk by Web Desk
Sep 23, 2023, 07:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆர்எஸ்எஸ் குறித்து தவறான நோக்கில் செய்துள்ள பதிவை உடனே நீக்குவதோடு  நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் திமுக ஐடி விங் மீது சட்டரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஆர்.எஸ்.எஸ். அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தென் பாரத செயலாளர் எஸ். ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்எஸ்எஸ் என்று அழைக்கப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் 1925 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு கடந்த 98 ஆண்டுகளாக பாரத தேசத்தை மீண்டும் உன்னத நிலைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகிறது. சுய ஒழுக்கம், கட்டுப்பாடு, தேசபக்தி நிறைந்த இளைஞர்களை உருவாக்கி வருகிறது.

இந்த தேசத்தின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்து, நமது பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை காக்கும் பணியை ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தேசத்திற்கும், மக்களுக்கும் நெருக்கடி, துன்பம் வரும்போது தன்னலம், சுய விளம்பரம் இல்லாமல் ஓடி சென்று துயர் துடைப்பவர்கள் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் என்று மக்கள் அறிவார்கள்.

சீனா, பாகிஸ்தான் நாடுகள் நம் மீது படை எடுத்தபோது, ராணுவ வீரர்களுக்கு துணை நின்ற ஆர்எஸ்எஸ் தொண்டர்களை 1963 ஆம் ஆண்டு நடந்த குடியரசு தின அணிவகுப்பு ஊர்வலத்தில் ராணுவத்தினருடன் ஆர்எஸ்எஸ் தொண்டர்களையும் பங்கேற்க செய்தார் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு. நிலநடுக்கம், வெள்ளப்பெருக்கு முதற்கொண்டு சுனாமி தாக்குதல் வரை மக்கள் உயிர், உடமைகளை இழந்தபோது அவர்களை காப்பாற்ற ஓடிச் சென்றவர்களும் ஆர்எஸ்எஸ் தொண்டர்களே.

கொரோனா பெருந்தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டபோது தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் மக்களின் மருத்துவம் உணவு தேவைகளை பூர்த்தி செய்ய ஆர்எஸ்எஸ் நண்பர்கள் முன் களத்தில் நின்று பணியாற்றியது நாடறியும்.

இதைத் தவிர நாடு முழுவதும் 1.50 லட்சம் நிரந்தர சேவை பணிகளை ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் சுய விளம்பரம் இன்றி தாய்நாட்டு சேவை என கடமையாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக கட்சியின்  ஐடி விங்கின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து உள்நோக்கத்துடனும், மக்கள் மத்தியில் கலவரத்தையும், அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையிலும் பதிவு ஒன்றை 22.9.2023 அன்று வெளியிட்டுள்ளனர்.

அந்தப் பதிவில் சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாத செயலை செய்தவன் ஆர்எஸ்எஸ் அமைப்பு சேர்ந்த ராதுராம் விநாயக் கோட்சே. இதன் மூலம் புல்புல் சாவர்க்கரின் சதி திட்டத்தை செயல்படுத்தி அமைதியின் வடிவமான மகாத்மா காந்தியை படுகொலை செய்து, நாட்டின் அமைதியை சீர்குலைக்க தொடங்கியது பயங்கரவாத அமைப்பான ஆர்எஸ்எஸ் என்ற தலைப்பில் ஆதாரமற்ற  குறிப்புகளோடு வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

1948 -ல் மகாத்மா காந்தியடிகள் கொலை செய்யப்பட்ட போது, அரசியல் காரணங்களுக்காக ஆர்எஸ்எஸ் அமைப்பை காங்கிரஸ் தடை செய்தது. ஆனால், மகாத்மா காந்தியடிகள் கொலைக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நிரூபிக்கப்பட்டு தடை விலக்கப்பட்டது. இது குறித்து விசாரிக்க 1966 -ல் அமைக்கப்பட்ட நீதியரசர் ஜே.எல். கபூர் கமிஷன் 407 ஆவணங்கள், 101 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. அதில், மகாத்மா காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் இல்லை. இந்த கொலைக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தொடர்பு இல்லை என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், இதை மறைத்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2014 -ல் மும்பை தானேவில் நடந்த கூட்டத்தில் இதே குற்றச்சாட்டை கூறினார். இது தொடர்பாக உச்ச நீதிமன்ற வழக்கில் 25.8. 2016 -ல் ராகுல் காந்தி, ஆர்எஸ்எஸ் அமைப்பை காந்தி கொலை வழக்கில் தொடர்புபடுத்தி பேசவில்லை என்று கூறி பின்வாங்கினார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சீதாராம் கேசரி, அர்ஜுன் சிங் ஆகியோரும் இதே போல பேசி பின்னர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர்.

ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொன்னால் அது உண்மையாகிவிடும் என்று நம்பும் திமுக ஐடி விங், தற்போது விஷமனத்தனத்தோடு மகாத்மா காந்தி கொலை வழக்கில் ஆர்எஸ்எஸ் அமைப்பை தொடர்புபடுத்தியுள்ளதோடு, ஜனநாயக முறையில் மக்கள் சேவையில் ஈடுபட்டு வரும் ஆர்எஸ்எஸ் அமைப்பை பயங்கரவாத அமைப்பு என்றும் குறிப்பிட்டுள்ளது வன்மையாக கண்டிக்கதக்கதாகும்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் தமிழக அமைச்சராக பதவி ஏற்றுள்ள ஒருவரின் தலைமையில் செயல்படும் திமுக ஐடி விங்கின் இந்த செயலை ஏற்றுக்கொள்ள முடியாது.

மக்கள் மத்தியில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அவப்பெயரையும், களங்கத்தையும் ஏற்படுத்தும் வகையிலும், கலவரத்தை தூண்டும் வகையிலும் உள்ள இந்த பதிவை உடனே நீக்குவதோடு, திமுக நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். இல்லையெனில், திமுக ஐடி விங் மீது சட்டரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags: RSSrss south bharath
ShareTweetSendShare
Previous Post

2 வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்த ரிசர்வ் வங்கி

Next Post

துரைமுருகன் கோட்டை விட்டுவிட்டார்!- அண்ணாமலை விமர்சனம்.

Related News

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies