நாட்டில் 500-க்கும் மேற்பட்ட முக்கிய ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது. அமிர்த காலத்தின்போது கட்டப்படும் இந்த புதிய நிலையங்கள் “அமிர்த பாரத நிலையங்கள்” என்று அழைக்கப்படும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
சென்னை-நெல்லை வந்தே பாரத் இரயில் சேவை உட்பட நாட்டில் மொத்தம் 9 வந்தே பாரத் இரயில் சேவைகளை டெல்லியில் இருந்தபடியே காணொளிக் காட்சி வாயிலாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், “கடந்த பல வருடங்களாகவே ரயில் நிலையங்கள் அபிவிருத்தி செய்யப்படாமல் இருந்தது நாம் அனைவரும் அறிந்ததே. ஆகவே, மேற்கண்ட இரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த இரயில் நிலையங்கள் அமிர்த காலத்தில் கட்டுப்படுவதால், ‘அமிர்த பாரத நிலையங்கள்’ என்று அழைக்கப்படும்கி. மேலும், இந்த நிலையங்கள் வரும் காலத்தில் புதிய பாரதத்தின் அடையாளமாக மாறும்.
வளர்ச்சிப் பாதையில் செல்லும் இந்தியா, தற்போது அதன் இரயில் நிலையங்களையும் நவீனமயமாக்கி வருகிறது. இந்த ரயில் நிலையங்களில் முதல் முறையாக லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டர்கள் அமைக்கப்படுகின்றன. இந்த டன் உள்கட்டமைப்பு வசதி 140 கோடி இந்தியர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும். அதேபோல, இன்று தொடங்கப்படும் 9 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில்கள் இந்தியா முழுவதும் கணிசமான இணைப்பை மேம்படுத்துவதோடு, சுற்றுலாவையும் மேம்படுத்தும்.
இதுவரை 25 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்காளம், கேரளா, ஒடிஸா, ஜார்கண்ட் மற்றும் குஜராத் மக்களும் இந்த சேவையைப் பெறுவார்கள். வந்தே பாரத் இரயில்களின் புகழ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 1,11,00,000 கோடி பயணிகள் பயணம் செய்திருக்கிறார்கள். சாமானிய குடிமக்களின் வாழ்க்கையில் ரயில்வே முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் நிலையில், கடந்த காலங்களில் இத்துறை புறக்கணிக்கப்பட்டது.
இரயில்வேக்கான இந்தாண்டு பட்ஜெட் 2014-ன் இரயில் பட்ஜெட்டை விட 8 மடங்கு அதிகம். இதேபோல், இரயில் பாதை இரட்டிப்பு, மின்மயமாக்கல் மற்றும் புதிய வழித்தடங்களுக்கான பணிகள் நடந்து வருகின்றன. ரயில் நிலையத்தை நிறுவிய ‘ஸ்தாப்னா திவாஸ்’ தினத்தை இரயில்வே கொண்டாடத் தொடங்கி இருக்கிறது. தற்போது ரயில் நிலையங்களின் பிறந்தநாளைக் கொண்டாடும் இந்த பாரம்பரியம் மேலும் விரிவுபடுத்தப்படும். மேலும் அதிகமான மக்கள் இதில் ஈடுபடுவார்கள்.
2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய, ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு மாநில மக்களும் வளர்ச்சி பெறுவது அவசியம். இரயில்வேயின் ஒவ்வொரு பணியாளரும் பயணத்தை எளிதாக்குவதற்கும் பயணிகளுக்கு நல்ல அனுபவத்தை வழங்குவதற்கும் தொடர்ந்து உணர்திறன் உடையவர்களாக இருக்க வேண்டும். மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அக்டோபர் 1-ம் தேதி காலை 10 மணிக்கு உத்தேச ஸ்வச்தா அபியானில் அனைவரும் ஈடுபட வேண்டும்” என்றார்.