இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2 வது ஒருநாள் போட்டி நேற்று இந்தூரில் நடைபெற்றது . மொத்தம் 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் படி இந்தியா முதல் பேட்டிங் ஆடியது ஆரம்பத்திலிருதே அசத்தலாக விளையாடி வந்த இந்திய அணியின் தொடக்க வீரர் கில் சதம் அடித்து 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவருடன் இணைந்து விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக களமிறங்கிய கே.எல்.ராகுல் 52 ரன்களுக்கு ஆட்டமிழக்க சூரியகுமார் யாதவ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் பெற்றுள்ளார். 43 வது ஓவரில் சூர்யா குமார் யாதவ் கேமரூன் கிரீன் பந்தில் அடுத்தடுத்து நான்கு 6 அடித்து அசத்தினார். இஷான் கிஷன் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜடேஜா 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.இந்த ஆட்டத்தில் இந்திய அணி 29 பௌண்டரிகளும் 18 சிக்சர்களும் அடித்து 5 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்களை எடுத்துள்ளது
400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஆஸ்திரேலியா அணி. ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக மேட் ஷார்ட் மற்றும் வார்னர் களமிறங்கினர். மேட் ஷார்ட் இரண்டாவது ஓவரிலேயே பிரசித்தி பந்தில் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்தாக களமிறங்கிய ஸ்மித் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார்.
இந்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்க பட்டது. மழை நின்றவுடன் DLS முறைப்படி ரன்கள் குறைக்கப்பட்டது. அதன்படி 33 ஓவர்களில் 317 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை தொடர்ந்து வார்னர் 53 ரன்களில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக வந்த வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா அணி 217 ரங்களில் ஆட்டமிழந்தது. இந்திய அணியின் அதிகபட்சமாக அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்களை எடுத்தனர். பிரசித்தி கிருஷ்ணா 2 விக்கெட்களும் ஷமி 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இந்த போட்டியின் ஆட்டநாயகனாக 105 ரன்கள் எடுத்த ஸ்ரேயாஸ் ஐயர் தேர்ந்தெடுப்பட்டார். மேலும் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.