ரோஜ்கர் மேளாவில் புதிதாக அரசு பணிகளில் சேர தேர்வான 51,000 பேருக்கு பணி நியமனக் கடிதங்களைப் பிரதமர் நரேந்திர மோடி நாளை வழங்க உள்ளார்.
டெல்லியில் நாளை காலை 10:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் 51,000 பணி நியமனக் ஆணைகளைப் ரோஜ்கர் மேளா விழாவில் வழங்கி சிறப்புரையாற்ற உள்ளார்.
ரோஜ்கர் மேளா நாடு முழுவதும் 46 இடங்களில் நடைபெற உள்ளது. மத்திய அரசு துறைகள், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பணியாளர்கள், தபால் துறை, இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறை, அணுசக்தித் துறை, வருவாய்த் துறை, உயர்கல்வித் துறை, பாதுகாப்பு அமைச்சகம் உட்பட பல அரசு துறைகளில் புதியதாக பொறுப்பேற்க உள்ளனர்.
ரோஜ்கர் மேளா வேலை வாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவிப்பதாக அமைகிறது. அது மட்டும் அல்லாமல் நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்க ரோஜ்கர் மேளா ஒரு வாய்ப்பு அளிக்கிறது.