தமிழகத்தில் 40 -க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் பணமோசடி தடுப்பு சட்டம், மற்றும் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், மற்றும் பொருளாதாரச் சட்டங்களைக் கண்காணிக்கவும், நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின்கீழ் செயல்படும் வருவாய்த் துறையின் கீழ் இயங்கும் புலனாய்வு மற்றும் சட்ட அமலாக்க அமைப்பே
அமலாக்கத்துறை ஆகும்.
அமலாக்க இயக்குநரகத்தில் இந்திய ரிசர்வ் வங்கி, செபி, வருமானவரி, சுங்கம் மற்றும் கலால் வரித்துறை அதிகாரிகள் ஆகியோர்களைக் கொண்டு இயங்குகிறது.
பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு, குற்றம் செய்பவர்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று காலை முதல், தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 40 -க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சண்முகம் மற்றும் தி.நகரில் விஜய் அடுக்குமாடிக்குடியிருப்பில் ரெய்டு நடைபெற்று வருகிறது.