கேரளாவில் 12 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை !
Oct 28, 2026, 07:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

  கேரளாவில் 12 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை !

Murugesan M by Murugesan M
Sep 25, 2023, 09:53 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) உடனான தொடர்பு தொடர்பாக, செப்டம்பர் 25 அன்று, அமலாக்க இயக்குனரகம் (ED) கேரளாவின் நான்கு மாவட்டங்களில் உள்ள சந்தேகத்திற்குரிய பலரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஒருங்கிணைந்த சோதனைகளைத் தொடங்கியது.

மலப்புரம், வயநாடு, திருச்சூர், எர்ணாகுளம் என மொத்தம் 12 இடங்களில் தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகிறது. இந்த தேடல்கள், தீவிரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதாக தொடர்ந்து வரும் அறிக்கைகளுக்கு மத்தியில், பி எப் ஐ (PFI)உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட சாத்தியமான நிதி பரிவர்த்தனைகளை வெளிக்கொணர்வதை நோக்கமாகக் கொண்டு இந்த சோதனைகள் நடந்துள்ளன.

இந்த விசாரணைகள், டெல்லியில் பதிவு செய்யப்பட்ட பணமோசடி வழக்குடன் தொடர்புடையது, மேலும், பி எப் ஐ (PFI)உடன் தொடர்புடைய 33 கணக்குகள் முன்பு முடக்கப்பட்டன.

இந்தத் தேடல்கள் பி எப் ஐ (PFI)  உடன் தொடர்புடைய பல்வேறு உறுப்பினர்கள் மற்றும் வளாகங்களுக்கும் நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதாரங்களின்படி, அமலாக்கத்துறை அதிகாரிகள், தேசிய புலனாய்வு முகமை (NIA)அதிகாரிகள்  உடன் இணைந்து இன்று காலை 6:00 மணியளவில் இந்த சோதனைகளை ஆரம்பித்தனர்.

அதே நேரத்தில் திருச்சூர் மாவட்டம் சாவக்காட்டில் உள்ள பி எப் ஐ (PFI) மாநிலத் தலைவர் லத்தீப்பின் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. முன்னதாக அவரது வீட்டில் என்ஐஏ சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், லத்தீப் சவுதி அரேபியாவுக்கு தப்பிச் சென்றதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. லத்தீப்பைத் தவிர, வயநாட்டில் உள்ள அப்துல் சமத், அப்துல் ஜமீல் மற்றும் மலப்புரத்தில் உள்ள நூருல் அமீன் ஆகியோரின் வீடுகளிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

அமலாக்கத்துறையின் சோதனைகள் முதன்மையாக பி எப் ஐ (PFI) தலைவர்கள் மற்றும் ஹவாலா பண பரிவர்த்தனைகள் மற்றும் பயங்கரவாத நிதி ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை ஏற்படுத்தக்கூடிய ஆதாரங்களை வெளிக்கொணர்வதில் கவனம் செலுத்துகிறது. பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளிக்கும் நோக்கத்தில் வெளிநாடுகளில் இருந்து பி எப் ஐ (PFI) தலைவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு கணிசமான அளவு ரூபாய்கள் மாற்றப்பட்டதாகக் கூறப்படும் தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

செப்டம்பர் 28, 2022 அன்று, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், பி எப் ஐ (PFI)  மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளுக்கு மத்திய அரசு ஐந்தாண்டு தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து, பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பாக பலரும் பி எப் ஐ (PFI) தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Tags: ED RAID
Share
Tweet
SendShare
Previous Post

பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் இந்தியப் பற்றிய பார்வை மிகவும் தெளிவாக இருந்தது- யோகி ஆதித்யநாத்!

Next Post

தமிழகத்தில் 40 இடங்களில் ரெய்டு – என்ன காரணம்?

Related News

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies